»   »  அப்பா வயசு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா

அப்பா வயசு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளாராம்.

தமன்னா தற்போது சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் ஹீரோயின் அவர் தான்.

இந்நிலையில் அவருக்கு புதிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா

கே.எஸ். ரவிக்குமார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 101வது படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக கூறப்படுகிறது.

அப்பா வயசு

அப்பா வயசு

பாலகிருஷ்ணாவுக்கு 56 வயது ஆகிறது. தமன்னாவுக்கு 27 வயது. அப்பா வயதில் இருக்கும் ஒருவருக்கு அவர் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜல்

காஜல்

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த சிரஞ்சீவிக்கு ஜோடியாக கைதி எண் 150 படத்தில் நடிக்க ஹீரோயின்கள் மறுத்தார்கள். ஆனால் அப்பா வயதாக இருந்தாலும் பரவாயில்லை என்று காஜல் அகர்வால் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

தெலுங்கில் தனது மார்க்கெட் டல்லடித்துள்ளதால் சீனியர்களுக்கு ஓகே சொல்லியுள்ளாராம் தமன்னா. அடுத்து அவர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

English summary
According to reports, Tamanna is going to be the heroine of Balakrishna's 101st movie to be directed by KS Ravikumar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil