»   »  10 வருஷம் சர்வீஸ் ஓவர்... தமன்னாவுக்கு பிரேக் கொடுக்குமா பாகுபாலி?

10 வருஷம் சர்வீஸ் ஓவர்... தமன்னாவுக்கு பிரேக் கொடுக்குமா பாகுபாலி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபாலி படம் பற்றிய எதிர்பார்ப்பு உலகத்துக்கே இருக்கும் போது அதில் நடித்து வரும் நடிக, நடிகைகளுக்கு இருக்காதா என்ன.

3 வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் இந்தப் படம் அவந்திகாவாக அதில் நடித்து வரும் நம்ம தமன்னாவுக்கு பிரேக் கொடுக்குமா. சினிமாவில் நடிகர்களுக்கு மட்டும் தான் படங்கள் பிரேக் கொடுக்க வேண்டும் என்றில்லை , நடிகைகளுக்கும் கொடுக்கலாம்.

ஒருநேரத்தில் தமிழில் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்த தமன்னா, 2011 ல் கடைசியாக நடித்த சிறுத்தை படத்துடன், வேறு எந்த புதிய படங்களிலும் நடிக்கவில்லை. மூன்று வருடம் கழித்து அஜித் தனது வீரம் படத்தில் ஜோடியாக நடிக்க வைத்து தமன்னாவின் தமிழ் பிரவேசத்தை மீண்டும் தொடங்கி வைத்தார்.

வீரம் படத்திற்குப் பின் தமன்னா நடிப்பில் அடுத்த தமிழ் படம் பாகுபாலி யாகத்தான் இருக்கும் 2005 ல் சந்த் சா ரோஷன் செரா என்ற ஹிந்தி படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் துவக்கிய தமன்னா இந்த 2015ம் ஆண்டுடன் திரையுலகில் 10 வருடத்தை நிறைவு செய்கிறார்.

15 வயதில்

15 வயதில்

அநேகமாக நம்ம லட்சுமி மேனனுக்கு ரோல் மாடல் தமன்னாவாகத்தான் இருப்பார், ஏனெனில் தமன்னா தனது 15 ம் வயதிலேயே திரையுலகில் நாயகியாக நடிக்கத் தொடங்கி விட்டார். 2005 ல் சந்த் சா ரோஷன் செரா என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரை வாழக்கையைத் துவக்கிய தமன்னா இந்த பத்து வருடங்களாக தனது கடுமையான உழைப்பால் திரையுலகில் தாக்குப் பிடித்து நிற்கிறார்.

மூன்று மொழிகளிலும்

மூன்று மொழிகளிலும்

ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என மூன்று மொழிகளிலும் இதுவரை சுமார் 40 படங்களை முடித்திருக்கிறார்.

கேடியின் மூலம் தமிழுக்கு

கேடியின் மூலம் தமிழுக்கு

தமிழில் இயக்குனர் ஜோதிகிருஷ்ணா செய்த ஒரே ஒரு உருப்படியான விஷயம் தமன்னா, மற்றும் இலியானா போன்ற அழகிகளை தமிழில் அறிமுகப் படுத்தியதுதான், தமிழில் முதன்முறையாக ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடியாக கேடி என்ற தமிழ் படத்தில் தமன்னா தமிழ் ரசிகர்களுக்கு 2006 ம் ஆண்டு அறிமுகமானார்.

கல்லூரி

கல்லூரி

தமிழில் சிறந்த படங்களை எடுத்துக் கொண்டிருந்த பாலாஜி சக்திவேல் தனது கல்லூரி படத்தில் தமன்னாவுக்கு வாய்ப்பளித்தார், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அறிமுக நாயகனுக்கு ஜோடியாக காதலை வெளிப்படுத்த முடியாத கேரக்டேரில் நடித்ததன் மூலம் நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயர் வாங்கினார்.

தமிழில் ஹிட் கொடுத்த படங்கள்

தமிழில் ஹிட் கொடுத்த படங்கள்

தமிழில் சில வருடங்கள் பிஸியான நடிகையாக வலம் வந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். படிக்காதவன், பையா, அயன், சிறுத்தை, மற்றும் கண்டேன் காதலை போன்ற படங்கள் தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களாகும்.

தெலுங்குலகில் ஹிட்டடித்த படங்கள்

தெலுங்குலகில் ஹிட்டடித்த படங்கள்

தெலுங்கில் 100% லவ் மற்றும் ஹேப்பி டேஸ் போன்ற படங்கள் தமன்னாவின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்களாக அமைந்தன. அதிலும் ஹேப்பி டேஸ் படம் கல்லூரி நட்பைப் பற்றிக் கூறும் அழகான ஒரு கவிதை போன்று இருக்கும், தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் பல கல்லூரி இளசுகளை ஈர்த்துக் கொண்ட இந்தப் படத்தைப் போன்று இன்னொரு படம் நட்பைப் பற்றி இன்னும் வரவில்லை.

தமிழில் விழுந்த இடைவெளி

தமிழில் விழுந்த இடைவெளி

கடைசியாக சிறுத்தை படத்தில் நடித்ததுடன் காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைந்து விட்டாரோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு சுமார் 3 வருடங்கள் தமிழ் திரையுலகில் தமன்னாவைக் காணவில்லை.

மீட்டு வந்த தல

மீட்டு வந்த தல

என்ன காரணத்தினாலோ தமிழ் சினிமாவில் யாரும் தமனாவுக்கு வாய்ப்பளிக்க தயங்கியபோது, துணிச்சலாக தனது வீரம் படத்தின் மூலம் அவரை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு மீட்டுக் கொண்டு வந்தார் அஜித். ஏற்றார்போல படமும் நன்றாக ஓடி வசூலில் நல்ல கலேக்சனைக் கொடுத்தது .

அவந்திகா

அவந்திகா

உலகம் முழுவதும் மாபெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாகுபாலி படத்தில் தற்போது அவந்திகா என்னும் வேடத்தில் நடித்திருக்கும் தமன்னாவுக்கு இந்தப் படமானது ஒரு பிரேக்கைக் கொடுக்கும் என்று நம்பலாம். ஏனெனில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, பல மொழிகளிலும் வெளியாகிறது. சரித்திரப் படம் என்பதால் வெறும் மரத்தைச் சுற்றி வந்து டூயட் ஆடி செல்லாமல் நடிப்பதற்கும் கண்டிப்பாக வாய்ப்பிருக்கும்.

பாகுபாலி பொண்ணுக்கு பிரேக் கொடுக்குமா..பார்க்கலாம்

English summary
The most spiciest edition for Rajamouli's forthcoming magnum opus Bahubali is none other than milky beauty Tamanna. She is playing the role of Princess Avantika in the flick and will be giving a titillating treat of glamour through her milky charisma, though she flings her sword at times. Tamanna completes 10 years career in film industry.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil