»   »  கோலிவுட்டில் தமன்னாவுக்கு காத்திருக்கும் 'ஆப்பு'? #tamanna

கோலிவுட்டில் தமன்னாவுக்கு காத்திருக்கும் 'ஆப்பு'? #tamanna

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டில் தமன்னாவுக்கு விரைவில் பிரச்சனை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

தமன்னா பாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமன்னா, பிரபுதேவா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது.

தெலுங்கில் அபிநேத்ரி என்ற பெயரிலும், இந்தியில் டுடக் டுடக் டூட்டியா என்ற பெயரிலும் வெளியாகிறது.

தமன்னா

தமன்னா

தமன்னா பாலிவுட், டோலிவுட்டில் சமத்துப் பிள்ளையாக படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அழகு அழகான உடை அணிந்து வந்து சிரித்த முகத்துடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார்.

கோலிவுட்

கோலிவுட்

தமிழ் படங்களில் நடித்தாலும் அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்து கொள்வது இல்லை. தமிழ் பட விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் தமன்னா மீது தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் கோபத்தில் உள்ளதாம்.

கத்தி சண்டை

கத்தி சண்டை

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கத்தி சண்டை படத்தின் நாயகி தமன்னா தான். இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்து கொள்வாரா இல்லை வழக்கம் போன்று டிமிக்கி கொடுப்பாரா என்பதை பார்க்க காத்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

பிரச்சனை

பிரச்சனை

கத்தி சண்டை படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கும் தமன்னா வரவில்லை என்றால் அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாம்.

English summary
Buzz is that Tamil film producers council is unhappy with Tamanna boycotting film promotions and may even face a ban.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil