»   »  விக்ரமுடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து துள்ளிக் குதிக்கும் தமன்னா

விக்ரமுடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து துள்ளிக் குதிக்கும் தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரமுடன் சேர்ந்து நடிப்பதை நினைத்தால் த்ரில்லாக உள்ளதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

விஜய் சந்தர் விக்ரமை வைத்து எடுக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் தமன்னா நடிக்கிறார். முதல் முறையாக விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

படப்பிடிப்பு வரும் வெள்ளிக்கிழமை துவங்க உள்ளது.

விக்ரம்

விக்ரம்

முதன் முதலாக விக்ரமுடன் சேர்ந்து நடிப்பதை நினைத்தால் த்ரில்லாக உள்ளது. என் கதாபாத்திரம் குறித்து எந்த தகவலையும் தற்போது தெரிவிக்க முடியாது என்கிறார் தமன்னா.

கதை

கதை

விஜய் சந்தர் கதையை கூறியதும் இம்பிரஸ் ஆகிவிட்டேன். அருமையான கதை. நான் வரும் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

தமன்னா

தமன்னா

விக்ரம், தமன்னா ஜோடி சேரும் இந்த படம் மூலம் போஜ்புரி நடிகர் ரவி கிஷன் கோலிவுட்டில் வில்லனாக அறிமுகம் ஆகிறார். படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார்.

சாய் பல்லவி

சாய் பல்லவி

விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியை தான் ஒப்பந்தம் செய்து முன்பணமாக ரூ. 15 லட்சம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் டேட்ஸ் இல்லை என்று கூறி படத்தில் இருந்து வெளியேறினார்.

English summary
Tamanna says that it is rally thrilling to act with Vikram in his upcoming movie to be directed by Vijay Chander.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil