»   »  ஒன்னுமே தெரியாமல் இருந்த எனக்கு 'அதை' சொல்லிக் கொடுத்ததே அனுஷ்கா தான்: தமன்னா

ஒன்னுமே தெரியாமல் இருந்த எனக்கு 'அதை' சொல்லிக் கொடுத்ததே அனுஷ்கா தான்: தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சினிமாவில் ஒன்னுமே தெரியாமல் இருந்த தனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தவர் அனுஷ்கா என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா நடித்துள்ள பாகுபலி 2 படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் பாலகிருஷ்ணாவின் படத்தில் நடிக்க உள்ளார் தமன்னா.

சினிமா மற்றும் சக நடிகைகள் குறித்து தமன்னா கூறுகையில்,

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள் ஒருவரையொருவர் பார்த்தால் முறைத்துக் கொண்டும், ஒருவரின் வாய்ப்பை மற்றொருவர் தட்டிப் பறித்துக் கொண்டும் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.

நட்பு

நட்பு

ஹீரோயின்கள் அனைவரும் நட்புடனேயே பழகி வருகிறோம். ஒருவரின் படம் ஹிட்டானால் மற்றவர்கள் போன் செய்து வாழ்த்துவோம். படம் ஓடாவிட்டால் ஆறுதல் கூறுவோம்.

அனுஷ்கா

அனுஷ்கா

நான் நடிக்க வந்த புதிதில் சினிமா பற்றி ஒன்னுமே தெரியாது. சீனியரான அனுஷ்கா தான் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். நிரந்தர ஆடை வடிவமைப்பாளரை வைத்து ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அவரே சொல்லிக் கொடுத்தார்.

காஜல், சமந்தா

காஜல், சமந்தா

காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் என் தோழிகள். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அசத்திவிடும் திறமை காஜலுக்கு உள்ளது. திறமையானவரான சமந்தா சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து சமூக சேவை செய்து வருகிறார் என்றார் தமன்னா.

English summary
Actress Tamanna said that it was her dear friend Anushka who guided her when she entered the film industry without knowing anything.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil