»   »  சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா

சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகுபலி 2 பட கிளைமாக்ஸ் குறித்த முக்கிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார் தமன்னா.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் படம் குறித்து தமன்னா கூறுகையில்,

பாகுபலி

பாகுபலி

பாகுபலி படத்தில் நடிக்க நான் கொடுத்துவைத்துள்ளேன். படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என நான் முதலில் எதிர்பார்க்கவில்லை. நான் ராஜமவுலி சாரின் தீவிர ரசிகை.

ராஜமவுலி

ராஜமவுலி

ராஜமவுலி சாருக்கு எப்பொழுதுமே 100 சதவீதம் வெற்றி தான். சிறப்பான முறையில் கதையை சொல்வதால் தான் அவருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 படத்தில் நான் பல காட்சிகளில் வருவேன். பாகுபலி போன்ற மெகா படத்தில் ஒரு காட்சியில் நடித்தால் கூட அது எனக்கு பெருமையே. ஒரு ஷாட், அரை ஷாட் எல்லாம் முக்கியம் இல்லை.

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

நான் தான் படத்தின் கிளைமாக்ஸ். கிளைமாக்ஸில் நீங்கள் என்னை பார்ப்பீர்கள். கிளைமாக்ஸ் பற்றி நான் மேலும் எதுவும் கூற முடியாது. ஏனென்றால் கிளைமாக்ஸுக்கே நான் தான் காரணம் என்றார் தமன்னா.

English summary
The countdown has begun! Magnum opus Baahubali 2 is finally releasing tomorrow (28th April). Actress Tamannaah Bhatia is all geared up for it. She has revealed a major secret about Baahubali 2: The Conclusion's climax.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil