»   »  கடைசியில் காசுக்காக ’அந்த’ வரிசையில் தமன்னாவும் சேர்ந்துட்டாரே...?

கடைசியில் காசுக்காக ’அந்த’ வரிசையில் தமன்னாவும் சேர்ந்துட்டாரே...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்குப் பட உலகில் 56 வயது ஆனாலும் கூட முன்னணி ஹீரோவாக திகழ்பவர் பாலகிருஷ்ணா. ரிட்டயர்டே ஆகாமல் இன்னமும் கூட இளமை வேடங்களில் சின்ன வயது ஹீரோயின்களுடன் டூயட் பாடி உதட்டைக் கடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் பாலகிருஷ்ணா.

தமிழில் நடிக்கும்போது மூத்த ஹீரோக்களுடன் வயதைக் காரணம் காட்டி நடிக்கத் தயங்கும் ஹீரோயின்கள் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் இருக்கும்போது பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேருவார்கள். எல்லாம் சம்பளத்துக்காகத்தான்.

Tamanna says ok to pair up with Balakrishna

நயன்தாரா, த்ரிஷா, லட்சுமி ராய், ராதிகா ஆப்தே, அஞ்சலி, ஸ்ரேயா என நீளும் இந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் தமன்னா. பாகுபலிக்குப் பிறகு தன் மார்க்கெட் உயரும் என எதிர்பார்த்தார். ஆனால் அந்த அளவுக்கு ஏற்றம் இல்லை. இதனால் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிக்கும் தமன்னா இப்போது பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர ஓகே சொல்லிவிட்டாராம்.

தனது தந்தை என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறில்தான் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.

English summary
Finally Tamanna also said ok to be paired up with Telugu senior actor Balakrishna.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil