»   »  சந்தோஷத்தில் தமன்னா!

சந்தோஷத்தில் தமன்னா!

Subscribe to Oneindia Tamil
Thamana

கல்லூரி படத்தில் தனது நடிப்பு சிறப்பாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிவதாலும், படத்தின் ஓபனிங் சிறப்பாக இருப்பதாலும் நாயகி தமன்னா படு சந்தோஷமாக இருக்கிறார்.

கேடி படத்தில் அறிமுகமான தமன்னா அதன் பிறகு வியாபாரி உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தார். நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தார். ஆனால் தமிழில் அவருக்கு சரியான பிரேக்தான் கிடைக்கவில்லை.

கிளாமராக நடிக்கத் தயாராக இருந்தும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை. மாறாக தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்ததால் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். அப்படியே தமிழிலும் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில்தான் ஷங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்லூரி படத்தின் நாயகி வாய்ப்பு தமன்னாவுக்கு வந்தது.

இப்போது கல்லூரி ஒரு வழியாக தியேட்டர்களுக்கு வந்து விட்டது. படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாம்,. குறிப்பாக தமன்னாவின் நடிப்பு அபாரம் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது. இதனால் தமன்னா சந்தோஷமாக உள்ளார்.

பட்டணத்து கல்லூரி மாணவி ஷோபனாவாக இப்படத்தில் வருகிறார் தமன்னா. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு சிறிய ஊருக்கு வரும் அவர் சந்திக்கும் நிகழ்வுகள்தான் படத்தின் கதை. தமன்னாவின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் புகழாரம் சூட்டி விடவே தமன்னா குஷியாகி விட்டார்.

இப்போது தமன்னாவைத் தேடி பட வாய்ப்புகள் ஓடி வர ஆரம்பித்துள்ளதாம். குறிப்பாக இரண்டு பெரிய நிறுவனங்கள் தமன்னாவை தங்களது படங்களில் புக் செய்துள்ளனவாம்.

அதில் ஒன்று ஏவி.எம்.மின் படம். சூர்யாவுக்கு ஜோடியாக இதில் நடிக்கிறார் தமன்னா. படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த். இந்த செய்தியை ஏற்கனவே சொல்லி விட்டோம்.

அடுத்த படத்தை தயாரிக்கப் போவது ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இதில் பாய்ஸ் நாயகன் சித்தார்த் நயாகனாக நடிக்கவுள்ளார்.

தனக்கு வந்த இந்தப் புது வாழ்வு குறித்து தமன்னா கூறுகையில், பாலாஜி சக்திவேல் சாருக்கு நான் பெரிய நன்றியைச் சொல்ல வேண்டும். கல்லூரி எனக்கு மிகப் பெரிய பெருமையைக் கொடுத்துள்ளது. நல்ல அறிமுகமாக இது அமைந்துள்ளது.

இப்படத்தில் நடித்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. நிறையக் கற்றுக் கொண்டேன். புதுப் பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன. ஆனால் அவசரப்பட்டு எதையும் ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. இப்போதைக்கு தமிழில் 2 படங்களில் மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளேன். தெலுங்கில் இரண்டு படங்கள் உள்ளன என்றார் தமன்னா.

கல்லூரியில் தேறியாகி விட்டது, அடுத்து யுனிவர்சிட்டியா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil