»   »  தமன்னா நகைக்கடை… இலியானா ஜவுளிக்கடை சபாஷ் சரியான போட்டி

தமன்னா நகைக்கடை… இலியானா ஜவுளிக்கடை சபாஷ் சரியான போட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில்தான் போட்டி என்றால் புதிதாக தொடங்கியுள்ள தொழிலும் தமன்னா - இலியானா இடையே பெரும் போட்டியாக உள்ளது.

சினிமாவில் நாளுக்கு நாள் புதுப்புது நாயகிகள் வருவதால் இன்றைய நாயகிகள் பலரும் நடிப்பு தவிர, பிற தொழில்களிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

பல நடிகைகள் சொந்தமாக ஆடை அலங்காரம், புடவை கடை, பேஷன் ஷோரூம்கள் வைத்துள்ளனர். இன்னும் சிலர் ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமன்னா நகைக்கடை

தமன்னா நகைக்கடை

நடிகை தமன்னா தற்போது சொந்தமாக நகை வியாபாரம் செய்யும் தொழிலில் களமிறங்கியுள்ளார். ‘ஒயிட் அண்ட் கோல்ட்' என்ற பெயரில் நகைகளை டிசைன் செய்து விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளாராம்.

சொந்த நகை டிசைன்

சொந்த நகை டிசைன்

இந்த டிசைனிங்கில் இந்தியாவின் சில முன்னணி டிசைனர்கள் ஈடுபட்டிருந்தாலும், தமன்னா தனது சொந்த வடிவமைப்பையும் இதில் ஈடுபடுத்தப் போகிறாராம்.

தமன்னா தற்போது ஆர்யாவுடன் இணைந்து ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, இரண்டு தெலுங்கு படங்களும் இவர் கைவசம் உள்ளது. தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகும் ‘பாகுபலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்களுக்காக நகைக்கடை

ரசிகர்களுக்காக நகைக்கடை

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தமன்னா, என்னுடைய ஸ்டைலை இதில் புகுத்தியுள்ளேன். எனது ரசிகர்களுக்காக இதனை மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

வித்யூலேகா மகிழ்ச்சி

வித்யூலேகா மகிழ்ச்சி

எனது தோழி தமன்னாவின் நகைக்கடையில் நான்தான் முதல் வாடிக்கையாளர். ஒயிட் அன் கோல்டு கடையில் முதல் நகையை எடுத்துள்ளேன் என்று தமிழ் நடிகை வித்யூலேகா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலியானா ஜவுளிக்கடை

இலியானா ஜவுளிக்கடை

நடிகை இலியானாவின் அம்மா சிறந்த ஆடை வடிவமைப்பாளர். எனவே இலியானா பெயரில் மும்பையிலும் ஹைதராபாத்திலும் ஜவுளிக்கடையை தொடங்கியுள்ளார்.

சபாஷ் சரியான போட்டி

சபாஷ் சரியான போட்டி

தமன்னாவும், இலியானாவும் பட உலகில்தான் போட்டி போட்டு நடித்து வருகின்றனர் என்றால் தொழில் தொடங்குவதிலும் போட்டிதான் என்கின்றனர் அவர்களின் ரசிகர்கள்.

English summary
Beautiful actress Tamanna has turned as Jewelry shop owner. Yes!! She has launched her own jewellery brand on March 22nd. She decided to take her father’s legacy ahead.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil