»   »  ட்விட்டர் மூலம் சொந்த செலவில் சூனியம் வைத்த தமன்னா

ட்விட்டர் மூலம் சொந்த செலவில் சூனியம் வைத்த தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்தால் கோலிவுட் தயாரிப்பாளர்கள் நிச்சயம் கடுப்பாவார்கள்.

தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இதில் தெலுங்கு, இந்தி படங்களை சமத்துப் பிள்ளையாக விளம்பரம் செய்கிறார். ஆனால் தமிழ் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளை மட்டும் புறக்கணிக்கிறார்.


இந்த காரணத்தால் தமிழ் பட தயாரிப்பாளர்கள் தமன்னா மீது கடுப்பில் உள்ளனர்.


தேவி

தேவி

தமன்னா, பிரபுதேவா, சோனு சூத் உள்ளிட்டோர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வரும் 7ம் தேதி ரிலீஸாகிறது.


விளம்பரம்

விளம்பரம்

தேவி படம் மூலம் பாலிவுட்டிலும் ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் தமன்னா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். அண்மையில் சென்னை வந்து படத்தை விளம்பரப்படுத்தினார்.


தமன்னா

தமன்னா

தமன்னா தேவி படத்தை சென்னையில் விளம்பரப்படுத்தியதை பார்த்த தமிழ் பட தயாரிப்பாளர்கள் கோபத்தில் இருக்க அவரோ தனது ட்விட்டர் கணக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தால் கோலிவுட் தயாரிப்பாளர்கள் நிச்சயம் கடுப்பின் உச்சத்திற்கே செல்வார்கள்.


பொற்கோவில்

தேவி படம் வெற்றி பெற தமன்னா, பிரபுதேவா, சோனு சூத் ஆகியோர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளனர். அந்த புகைப்படத்தை தமன்னா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


English summary
Tamanna visited golden temple in Amritsar with actors Prabhu Deva and Sonu Sood ahead of the release of her upcoming moving Devi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil