தமன்னாவை ஷாருக்கான் மகன் எப்படி ஆட வைத்திருக்கிறாரு பாருங்க.. முழு பாடலே வெளியாகிடுச்சே!

மும்பை: விவாகரத்துக்குப் பிறகு சமந்தா அல்லு அர்ஜுன் உடன் இணைந்து "ஊ அண்டாவா" பாடலில் படு கிளாமராக நடனமாடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், விஜய் வர்மாவுடன் காதல் பிரேக்கப்புக்கு பிறகு ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் இயக்கிய பேட்ஸ் ஆஃப் பாலிவுட்டில் தமன்னா போட்ட தாறுமாறான கவர்ச்சி ஆட்டத்தின் முழு வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பேட்ஸ் ஆஃப் பாலிவுட் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் இயக்குநராக அறிமுகமான நிலையில், அம்பானி முதல் அட்லி வரை பலரையும் அழைத்து பாலிவுட் சினிமாவுக்கு ஷாருக்கான் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி எல்லாம் கோலாகலமாக நடந்த அளவுக்கு பேட்ஸ் ஆஃப் பாலிவுட் சீரிஸுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

Tamannaah Bhatia most glamouros Ghafoor full video song out now

ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சும்மா கேமியோ ரோலில் கூலி படத்தில் அமீர்கான் வந்து சென்றதை விட மோசமாக வந்து செல்வது தான் பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமீர்கான் முதல் ராஜமெளலி வரை கேமியோ: பேட்ஸ் ஆஃப் பாலிவுட் சீரிஸில் அமீர்கான், ஷாருக்கான், ரன்பீர் கபூர், கரண் ஜோகர், ராஜமெளலி என ஏகப்பட்ட பிரபலங்கள் கேமியோவாக வந்து செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கான சரியான கதை மற்றும் காட்சிகளை இயக்குநரான ஆர்யான் கான் வடிவமைக்கவில்லை. நெப்போ கிட்டான ஆஹான் பாண்டேவின் அறிமுக படமான சையாரா 500 கோடி வசூல் செய்த நிலையில், ஷாருக்கானின் வாரிசு ஆர்யான் கான் இயக்கிய பேட்ஸ் ஆஃப் பாலிவுட்டுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளது. ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை பாலிவுட் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

உள்ளாடை தெரிய தமன்னா ஆட்டம்: இந்த வெப்சீரிஸை காப்பாற்ற என்ன செய்வது என யோசித்த ஆர்யான் கான் பல முன்னணி நடிகர்களின் கேமியோக்களையும் தாண்டி காவாலா பாட்டுக்கு டான்ஸ் போட்ட தமன்னாவையும் உள்ளாடை தெரிய பேன்ட்டை இறக்கி விட்டு படு கவர்ச்சியாக ஆட வைத்துள்ளார். அந்த பாடல் வீடியோ தற்போது வெளியாகி யூடியூபில் ஏகப்பட்ட ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளது.

4 மில்லியன் வியூஸ்: பேட்ஸ் ஆஃப் பாலிவுட் படத்திலேயே தமன்னாவின் இந்த பாடல் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்கின்றனர். யூடியூபில் வெளியான 21 மணி நேரத்திலேயே 4.4 மில்லியன் வியூஸ் அள்ளி பாடல் டிரெண்டாகி வருகிறது. கூடிய சீக்கிரமே 5 மில்லியன் முதல் 50 மில்லியன் வியூஸ் வரை இந்த பாடல் டிரெண்டாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X