வயதானால் நோய் என்று அர்த்தமா?.. ஏன் இவ்வளவு பயம்?.. ஓபனாக பேசிய தமன்னா

சென்னை: தமிழில் ஃபேமஸான ஹீரோயினாக வலம் வந்த தமன்னாவின் கவனம் இப்போது ஹிந்தியில்தான் அதிகமாக இருக்கிறது. அங்கு அவருக்கு தகுந்த சம்பளம் வழங்கப்படுவதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவரும் சம்பளத்துக்கு ஏற்ற கவர்ச்சியை பாடலில் வாரி வழங்குகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கேடி படத்தில் வில்லியாக நடித்த தமன்னாவுக்கு கல்லூரி திரைப்படம் பெரிய அடையாளத்தை கொடுத்தது. அப்படத்துக்கு பிறகு தமிழில் அவரது காற்று பலமாக வீசியது. விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என பலருடன் ஜோடி போட்டு நடித்தார். கோ படத்தில் தமன்னா நடித்தால்தான் என கூறி படத்திலிருந்து சிம்பு விலகியதாகவும் அந்த சமயத்தில் அரசல் புரசலாக ஒரு தகவல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

கிசுகிசுக்கள்: அவரது வளர்ச்சி தமிழ் சினிமாவில் எப்படி அபரிமிதமாக இருந்ததோ அதேபோல் அவரை சுற்றி கிசுகிசுவும் அதிகம் பரவியது. அதாவது பையா, சிறுத்தை என வரிசையாக கார்த்திக்கு ஜோடியாக நடித்ததால் இரண்டு பேரும் காதலிப்பதாக அப்போது பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அதில் துளிக்கூட உண்மையில்லை என தனது நடவடிகைக்களின் மூலம் பிற்காலத்தில் உணர்த்தினார் தம்மு. இது ஒருபக்கம் இருக்க தெலுங்கிலும் அவரது மார்க்கெட் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

Tamannaah Bhatia s Bold Statement on Aging Goes Viral Getting Older Is Not a Disease
Photo Credit:

ஹிந்தியில் பிஸி: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் அவரது வாய்ப்புகள் சரசரவென்று குறைந்தன. இதனால் அவரது கவனம் முழுவதும் ஹிந்தியில் சென்றது. அங்கு தனக்கு ஏற்ற ரோல்கள் கிடைத்ததால் பிஸியாக நடித்தார். மேலும் விஜய் வர்மாவை காதலிக்கவும் செய்தார். விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பிரேக் அப் ஆனது.

தமன்னாவின் பேட்டி: இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் நடிக்க ஆரம்பித்த காலத்திற்கும் இப்போதைக்கும் சினிமா நிறையவே மாறியிருக்கிறது. அது இன்னும் வளர்ச்சியடையும் என்று ஆழமாக நம்புகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் நடிகையாகவே இருக்க விரும்புகிறேன். நான் எங்கே சென்றாலும் என்னை மக்கள் அடையாளம் கண்டுபிடிப்பார்கள். ஆனால் நான் அப்படித்தான் செல்வேன். எனக்கு மக்களை பிடிக்கும். அவர்களோடு திரிவது பிடிக்கும். 30 வயதுவரை நடிப்பேன்; பிறகு திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்வேன் என்று நினைத்தேன். ஆனால் 20களின் பிற்பகுதியில் இருந்தபோதும் நான் எனது சொந்த நிலைமைக்கு வந்தேன்.

வயது ஏறினால் நோயா?: வயது பயம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. வயதானதை பற்றி சொல்லும்போது பலரும் ஏதோ நோய் வந்ததை போல் சொல்வார்கள். வயதாவது என்பது அற்புதமான ஒன்று. ஆனால் அதை நினைத்து மக்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என தெரியவில்லை. சினிமா துறை அதிர்ஷ்டவசமாக சுவையான நினைவுகளையும், பகுதிகளையும் எனக்கு கொடுத்திருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X