For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  15 வருசமாச்சு.. தமன்னா போட்ட ஸ்வீட் ட்வீட்.. ரசிகர்கள் வாழ்த்து !

  |

  ஹைதராபாத் : திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமன்னா.

  Wedding Vows என்னும் ஆங்கில பத்திரிக்கையானது திருமணம் சம்பத்தப்பட்ட பேஷன் , டிசைன் ,ஜுவெல்லரி மற்றும் இளைய தலைமுறை தங்களது கனவு திருமணத்தை எவ்வாறு வடிவமைக்கலாம் என்ற தகவல் தரும் ஒரு பத்திரிக்கையாகும்.

  Wedding vows தனது 9 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ஒரு ஸ்பெசலான அட்டை படத்தை தமன்னாவின் வித்தியாசமான போட்டோவோடு வெளியிட்டு உள்ளது .

   15 ஆண்டு நிறைவு

  15 ஆண்டு நிறைவு

  தனது ட்விட்டில் மேலும் சொல்லி இருபதாவது 'திருமணம் என்றாலே என்னை பொறுத்தவரை காதலை கொண்டாடுவது ,சந்தோசம் பொங்க நடனமாடுவது , எனது லுக்கை மேலும் அழகாக்குவது எனவும், இதற்கு எல்லாம் மேலாக சுவையான உணவுகளை சாப்பிட்டு மகிழ்ச்சி அடைவது என்று சொல்லியுள்ள தமன்னா, வெட்டிங் வோவ்ஸ் அட்டைப்படத்துக்கான ஷூட்டிங்கில் இதெல்லாம் தனக்கு கிடைத்ததாகவும் சந்தோஷப்பட்டுள்ளார். wedding vows இன் 9 ஆம் அண்டை கொண்டாடுவதோடு தனது திரைப்பயணத்தின் 15 ஆவது ஆண்டையும் கொண்டாடுகிறேன் என தெரிவித்துள்ளார் .

   ரசிகர்கள் ரீட்விட்

  ரசிகர்கள் ரீட்விட்

  தமன்னா, அந்த அட்டைப்படதையும் அவர் வெளிட்டு இருப்பதனால், அவரது ரசிகர்கள் ரீட்விட் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர் . குறிப்பாக அவரது Eye Make Up பலராலும் பாராட்டப்படுகிறது. குறிப்பாக இந்த போட்டோவில் அவர் பலவண்ணங்கள் கொண்ட ஜெர்கின் வடிவிலான டாப்ஸ், வரும் காலங்களில் இளம் தலைமுறை விரும்பி வாங்கும் ஒரு ஆடையாக மாறும் என ஆடை வடிமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

   தமன்னா முதல் படம்

  தமன்னா முதல் படம்

  2005 இல் வெளிவந்த 'சந்த் ஷா ரோஷன் செஹ்ரா' என்ற ஹிந்தி படம் தான் தமன்னா நடித்த முதல் திரைப்படமாகும். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது அதையடுத்து அவர், 'ஸ்ரீ' என்ற தெலுங்கு படத்திலும் அறிமுகம் ஆனார். தமிழில் 2006 இல் வெளிவந்த ' கேடி' படத்தில் ரவிகிருஷ்ணா ஜோடியாக நடித்தார். இதுவே அவரது முதல் தமிழ் படமாகும்.

   கவர்ச்சி கன்னி

  கவர்ச்சி கன்னி

  பையா படத்தில் 'அடடா அடமழை டா' பாடலில் தமன்னாவின் கவர்ச்சி மற்றும் உடல் அழகிலும், நடன அசைவிலும் தூக்கத்தை தொலைத்தவர்கள் ஏராளம். பையா படம் ஓரளவு வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அவ்வபோது தமிழ் படங்களில் நடித்து வந்தபோதும் இவரது கவனம் பெரும்பாலும் தெலுங்கு இண்டஸ்ட்ரியிலேயே இருந்தது.

   இரும்பு பெண்மணி

  இரும்பு பெண்மணி

  வெறும் அழகு பதுமையாக மட்டும் தன்னை கட்டிக்கொள்ள விரும்பாத தமன்னா பாகுபலி படத்தின் மூலம் தன்னை ஒரு போராளியாக, இரும்பு பெண்மணியாக நடித்து, நடிப்பின் அடுத்த பரிமாணத்தை வெளிப்படுத்தினார் . பாகுபலி படத்தில் தம்மனாவின் நடிப்பை தொடர்ந்து அடுத்ததாக அவருக்கு வரலாற்று படமான 'சாயிரா நரசிம்மா ரெட்டி' படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.

   ரசிகர்கள் ஏமாற்றம்

  ரசிகர்கள் ஏமாற்றம்

  2020ம் ஆண்டு தமன்னா ஒப்பந்தம் ஆகியுள்ள தமிழ் படங்கள் இதுவரை எதுவும் அறிவிக்க படவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. எப்படி இருப்பினும் தமிழ் டாப் ஹீரோக்களுடன் ஏதேனும் ஒன்றிரெண்டு படங்களில் தமன்னா நடித்து வெளிவரும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

  English summary
  Tamannaah completes 15th year in the film industry
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X