எப்பவும் பொம்மை மாதிரியே இருக்கீங்களே...எப்படி? கிண்டல் கேள்விக்கு நடிகை தமன்னாவின் பதிலை பாருங்க!

By

சென்னை: எப்போதும் பொம்மை போல் இருக்கிறீர்களே என்று ரசிகர் ஒருவர் கிண்டலாக கேட்ட கேள்விக்கு நடிகை தமன்னா பதிலளித்துள்ளார்.

Recommended Video

ACTION MOVIE PUBLIC REVIEW | VISHAL | TAMANNAAH | YOGIBABU | SUNDAR C | FILMIBEAT TAMIL

கேடி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான தமன்னா, தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, அயன், கண்டேன் காதலை, பையா, வீரம், பாகுபலி 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இப்போது, நவம்பர் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த த்ரில்லர் தொடரை ராம் சுப்ரமணியன் இயக்குகிறார்.

ஸ்ருதிஹாசன்

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் தமன்னா, சமூக வலைத்தளத்தில் ரசிகர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். ரசிகர் ஒருவர், நடிகை ஸ்ருதிஹாசன் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டிருந்தார். அதற்கு அவர், என் டார்லிங் என்று தெரிவித்துள்ளார். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் சூர்யாவுடன் நடிப்பீர்களா? என்ற கேள்வி கேட்டிருந்தார்.

பேபி டால் மாதிரி

அதற்கு, அவருடன் நடிப்பது கனவு. மீண்டும் ஜோடி சேர விரும்புகிறேன் ' என்று தெரிவித்துள்ளார். 'நீங்க எப்பவுமே பேபி டால் மாதிரி இருக்கீங்களே எப்படி?' என்று ஒரு ரசிகை கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த தமன்னா, உங்க பாராட்டுக்கு நன்றி. இதற்கு என் அப்பா அம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

என்ன தோன்றும்?

அஜித் ரசிகர், அஜித்துடன் தமன்னா இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, இந்தப் போட்டோவை பார்த்தால், உங்களுக்கு என்ன தோன்றும் என்று கேட்டிருந்தார். அதற்கு நல்ல நினைவுகள் என்று கூறியுள்ளார். சினிமா வாழ்க்கை பற்றி ஒருவரியில் சொல்ல முடியுமா? என்ற கேள்விக்கு, அது ஒரு சாகசம் என்று தெரிவித்துள்ளார்.

செல்லப் பெயர்

நடிகை காஜல் அகர்வால் பற்றிய கேள்விக்கு, நாங்கள் ஒன்றாக சுற்றுவோம். அவர் ஜாலியானவர். எல்லாம் தெரிந்து வைத்திருப்பவர் என்று கூறியுள்ளார். சிலரின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தமன்னா, எனக்குப் பிடித்த இடம் வீடுதான். வீட்டில் என் செல்லப் பெயர் தம்மு. பாவ் பாஜியைதான் விரும்பி சாப்பிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

பாகுபலி சவால்

பாகுபலி சவால்

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், 'கல்லூரி' படத்தில் நடித்தபோது எனக்கு கஷ்டமாக இருந்த காட்சி, அந்த கிளைமாக்ஸ்தான். எரியும் பேருந்தில் படப்பிடிப்பு நடந்ததால் கஷ்டமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். நடித்த படங்களிலேயே அதிக சவாலை எதிர்கொண்டது பாகுபலியில்தான் என்றும் அது திருப்தியான அனுபவம் என்று கூறியுள்ளார். கேமரா முன் நின்று ஒவ்வொரு நாளும் புதிது புதிகாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X