twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதலில் பிடிக்கவில்லை... காட்ட வேண்டியதை காட்டியதால் இந்த உயரத்துக்கு வந்தேன்... தமன்னா ஓபன் டாக்

    |

    ஹைதராபாத்: நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
    ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் தமன்னாவுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது.
    இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் திரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவமே இல்லை என பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார் தமன்னா.
    இதனைத் தொடர்ந்து தற்போது திரையுலகில் தான் எப்படி இருக்கிறேன் என மனம் திறந்து பேசியுள்ளார் அவர்.

    திருமணத்திற்கு ஓகே சொன்ன தமன்னா..மாப்பிள்ளை யார் தெரியுமா? பரபரப்பாக நடக்கும் கல்யாண வேலை!திருமணத்திற்கு ஓகே சொன்ன தமன்னா..மாப்பிள்ளை யார் தெரியுமா? பரபரப்பாக நடக்கும் கல்யாண வேலை!

     மாடலிங் டூ சினிமா

    மாடலிங் டூ சினிமா

    மும்பையைச் சேர்ந்த தமன்னா ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பிஸியாக இருந்தார். ஏராளமான விளம்பரங்களில் நடித்த தமன்னா, முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கிய தமன்னா, 2006ல் வெளியான 'கேடி' படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். அன்று முதல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கி வரும் தமன்னா, சில வருடங்களாக பழைய ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வருகிறார்.

     காதலும் கடந்து போகும்

    காதலும் கடந்து போகும்

    வியாபாரி, கல்லூரி, தனுஷுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நாயகியாக அசரடித்த தமன்னா, தெலுங்கிலும் பிஸியாகவே வலம் வந்தார். கார்த்தியுடன் பையா, சிறுத்தை, தோழா என அடுத்தடுத்து லவ்லி பேபியாக ரசிகர்களை வசீகரித்த தமன்னாவுக்கு, அவருடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது எல்லாம் உண்மை இல்லை என்றும் சொல்லப்பட்டது. தமிழில் விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்த தமன்னாவிற்கு ராஜமெளலி இயக்கத்தில் நடித்த பாகுபலி மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது.

     தமன்னா ஓபன் டாக்

    தமன்னா ஓபன் டாக்

    2022ம் ஆண்டு மட்டும் மொத்தம் 4 திரைப்படங்களில் நடித்துள்ளார் தமன்னா. தெலுங்கில் F3: Fun and Frustration, குர்துண்ட சீதாகாலம் படங்களிலும், இந்தியில் பாப்லி பவுன்சர், பிளான் A பிளான் B ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில், திரையுலக பயணம் குறித்து மனம் திறந்துள்ள தமன்னா, தனது அனுபவங்களையும் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், "எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் நாம் நினைத்தது எல்லாம் உடனுக்குடன் நடந்துவிடாது எதற்கும் நேரம் அமையும் வரை நாம் காத்திருக்க வேண்டும். அதேபோல் சினிமாவில் அறிமுகமான புதிதில் எனக்கு பிடித்த கேரக்டர்கள் அமையவில்லை. ஆனாலும், போக போக நான் நடித்த பாத்திரங்களில் எனது திறமையை காட்ட விரும்பினேன். அதனால் வெற்றிப் பெற்றேன், சினிமாவில் நான் என்ன செய்ய நினைத்தேனோ, அதை செய்து சாதித்து விட்டேன். அதனால் எனது திரையுலக பயணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உள்ளதாக கூறியுள்ளார்.

     நாயகிகளுக்கு மரியாதை கிடையாது

    நாயகிகளுக்கு மரியாதை கிடையாது

    முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமன்னா, ''சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. எங்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள். ஹீரோவை விட நாயகிகளுக்கு சம்பளம் குறைவாக தான் வழங்கப்படுகிறது. இது சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது'' என பேசியிருந்தார். மேலும், 'நாயகிகளின் போட்டோ பட போஸ்டர்'களில் வருவதே பெரிய விஷயம். என்றும், சினிமா ப்ரோமோஷனுக்கு ஹீரோக்கள் வராமல் இருந்தால் காரணம் சொல்வார்கள். ஆனால், நாயகி என்றால் குறைகூறுவார்கள்" எனவும் பேசி சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Tamannaah recently said that women are not valued in the film industry. In this case, Tamanna said that now I have achieved what I wanted in cinema and I am happy about it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X