இப்படி ஒரு ரோலிலா நடித்துள்ளார் தமன்னா...புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
சென்னை : தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருக்கும் தமன்னா தற்போது இந்தியில் செம பிஸியாக நடித்து வருகிறார்.தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னா இந்தியில் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்று, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு Babli Bouncer என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தமன்னா பவுன்சர் ரோலில் தான் நடிக்கிறார்.
பேண்ட் ஷர்ட்டில் கெத்தாக கையை கட்டிக் கொண்டு நிற்கும் தமன்னாவின் கலர்ஃபுல் போட்டோவுடன் Babli Bouncer ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு படத்தின் ரிலீஸ் பிளான் பற்றியும் இந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டிலை பார்த்தால் இது நிச்சயம் பெண்ணை மையமாகக் கொண்ட கதையாக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதுவும் தமன்னா கையில் இருக்கும் சிலம்பு போன்ற காப்பு, அவர் நிற்கும் தோரணையை பார்த்தால் படத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்றே தோன்றுகிறது.
அதாவது, Babli Bouncer படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. செப்டம்பர் 23 ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட ரிலீசிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளதால் இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பப்ளி பவுன்சர் படம் இந்தியில் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட உள்ளது. டைரக்டர் மதுர் பந்தர்கர் இயக்கி உள்ள இந்த படத்தை வினீத் ஜெயின் ஜங்கிளி பிக்சர்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்.
கடைசியாக தெலுங்கில் வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்த F3: Fun and Frustration படத்தில் நடித்த தமன்னா, இந்தியில் Bole Chudiyan, Plan A Plan B படங்களிலும்,தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இதில் ஒன்று சிரஞ்சீவி நடக்கும் போலா சங்கர். இன்னும் பல படங்களில் நடிக்க தமன்னாவிடம் பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











