»   »  'கண்டுகொள்ளாத கார்த்தி பாராட்டிய நாகார்ஜூனா' தமன்னாவின் தோழா அனுபவங்கள்

'கண்டுகொள்ளாத கார்த்தி பாராட்டிய நாகார்ஜூனா' தமன்னாவின் தோழா அனுபவங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதாராபாத்: நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தோழா படத்தில் கார்த்தியின் ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார்.

பாகுபலி வெற்றிக்குப் பின் தமன்னாவின் மார்க்கெட் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. இதனால் தோழா, தர்மதுரை, ஏ.எல்.விஜய் படம் என அடுத்தடுத்து நிறைய தமிழ்ப் படங்களில் அவர் நடித்து வருகிறார்.


இந்நிலையில் அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் தோழா படத்தின் கதாபாத்திரம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்களை தமன்னா பகிர்ந்து கொண்டுள்ளார்.


பிடிவாதமான நாயகி

பிடிவாதமான நாயகி

தோழா படத்தில் என்னுடைய பெயர் கீர்த்தி. இதில் நாகர்ஜுனா சாரின் உதவியாளராக நடித்திருக்கிறேன். நன்றாகப் படித்த மற்றும் பிடிவாதமான பெண்ணாக கீர்த்தி கதாபாத்திரத்தை இயக்குனர் வம்சி வடிவமைத்துள்ளார்.


சுருதிஹாசன்

சுருதிஹாசன்

முதலில் இப்படத்தில் சுருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தினால் அவர் இப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என தெரியவில்லை. சுருதி விலகியதால் எனக்கிந்த வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் உதவியுடன் தெலுங்கு மொழியில் டப்பிங் பேசியிருக்கிறேன். தமிழில் டப்பிங் பேசவில்லை.


இன்டச்சபில்ஸ்

இன்டச்சபில்ஸ்

தோழா பிரெஞ்சுப் படத்தின் ரீமேக் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன அது உண்மையில்லை. அந்த 'இன்டச்சபில்ஸ்' என்ற பிரெஞ்சு மொழிப்படத்தை எங்களது படக்குழுவில் பார்க்காத ஒரே நபர் நானாகத் தான் இருப்பேன். அந்தப் படத்தை ஆஹா ஓகோ என்று மற்றவர்கள் புகழ்ந்தாலும், நான் அந்தப் படத்தை பார்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.


பாகுபலி மேஜிக்

பாகுபலி மேஜிக்

நிறையப் படங்களில் நடிப்பதை விட சுவாரஸ்யமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அதனால் தான் பாகுபலிக்குப் பின் என்னுடைய படங்களில் ஒரு இடைவெளி விழுந்திருக்கிறது. என்னுடைய திரை வாழ்க்கையில் பாகுபலி ஒரு பெரிய மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. 2 ம் பாகத்தில் என்னுடைய பங்கு அதிகம் இல்லையென்றாலும் கூட, பாகுபலி படத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்கக் காரணம் இதுதான்.


நாகர்ஜுனா

நாகர்ஜுனா

தோழா படத்தில் நாகார்ஜுனா சார் சவாலான வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். இந்த வேடத்தில் அவரைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது. படப்பிடிப்பில் நான் அழகாக இருப்பதாக நாகா சார் அடிக்கடி பாராட்டுவார். ஆனால் கார்த்தி, இயக்குநர் வம்சி இருவரும் என்னைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் " என வருத்தப்பட்டிருக்கிறார்.


பையா, சிறுத்தை

பையா, சிறுத்தை

பையா, சிறுத்தை படத்துக்குப் பின் கார்த்தி-தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் 3 வது தோழா. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் இப்படம் வருகின்ற 25 ம் தேதி வெளியாகிறது. கார்த்தி-தமன்னா ஜோடிக்கு ஹாட்ரிக் ஹிட்டாக தோழா மாறுமா? பார்க்கலாம்.


English summary
Tamannah Upcoming Movie Thozha Worldwide Released on March 25. Now she Reveals her Character and Shooting Experience in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil