மாலத்தீவில் மிரள வைக்கும் தமன்னா.. கோலிவுட் குயினெல்லாம் இப்படி பிகினியில் கிளம்பிட்டாங்களே!

சென்னை: கோலிவுட் நடிகைகள் எல்லாம் சினிமா படங்களிலேயே கவர்ச்சியை தாராளமாக காட்டுவதில் தயக்கம் கொண்டிருந்த காலம் எல்லாம் மலேறி தற்போது மாலத்தீவில் எல்லாரும் பிகினியுடன் சுற்றி வருகின்றனர்.

அவர்கள் ஜாலியாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் அப்படியே போட்டு இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக அதிகரித்து வருகின்றனர்.

பேச்சுலர் நடிகை திவ்யபாரதியின் பிகினி போட்டோ மெர்சலாக்கிய நிலையில், தமன்னா தாறுமாறாக போஸ் கொடுத்து வீடியோ, போட்டோ என டிரெண்ட் செய்து வருகிறார்.

மாலத்தீவுக்கு டிக்கெட் போடுங்க

மாலத்தீவுக்கு டிக்கெட் போடுங்க

சம்மர் வந்ததும் வந்தது கோலிவுட் முதல் பாலிவுட் நடிகைகள் வரை மீண்டும் மாலத்தீவுக்கு டிக்கெட் போட்டு பறந்துள்ளனர். கோடை விடுமுறையை கொண்டாட சிறந்த இடமாக மாலத்தீவு மாறிவிட்டது. கோலிவுட் நடிகைகளான திவ்யபாரதி மற்றும் தமன்னா உள்ளிட்டோர் தற்போது மாலத்தீவில் குடிகொண்டுள்ளனர். சன்னி லியோனும் அங்கே தான் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

பிகினி முக்கியம்

பிகினி முக்கியம்

மாலத்தீவுக்கு விடுமுறைக்கு செல்பவர்கள் நல்ல காஸ்ட்லியான அரை டஜன் பிகினிகளையும் வாங்கிக் கொண்டு சுற்றுலா கிளம்பி விடுகிறார்கள் போல, இல்லை அங்கே ஏதாவது விலை குறைவாக பிகினி வியாபாரம் நடக்கிறதா என தெரியவில்லை. இப்படி கோலிவுட் நடிகைகளும் அரைகுறை ஆடையுடன் முழு கவர்ச்சி தரிசனத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பேச்சுலர் நடிகை திவ்யபாரதியின் பிகினி போட்டோக்கள் வேற லெவலில் டிரெண்டாகி உள்ளன.

தமன்னாவும் தாறுமாறு

தமன்னாவும் தாறுமாறு

திவ்யபாரதியை தொடர்ந்து கோலிவுட்டின் வெண்ணெய் சிலை அழகியான தமன்னாவும் மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார். பிங்க் நிற பிகினி உடையில் படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் போட்டு இணையத்தை அதிர வைத்து வருகிறார் தமன்னா.

கிளாமர் பக்கம்

கிளாமர் பக்கம்

சுடிதார் அணிந்து சீனியர் நடிகை போல பெட்டர்மாக்ஸ், நவம்பர் ஸ்டோரி என நடித்து வந்த நிலையில், எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் கவர்ச்சியில் அதகளம் செய்ய ஆரம்பித்துள்ளார். பாலிவுட்டில் புதிய ஆல்பங்களில் நடித்து வரும் தமன்னா சீக்கிரமே கோலிவுட்டில் பெரிய நடிகருடன் நடிக்க தீவிரமான முயற்சியில் இறங்கி உள்ளாராம்.

விஜய்க்கு ஜோடி

விஜய்க்கு ஜோடி

விஜய்யின் சுறா, அஜித்தின் வீரம் படங்களில் நடித்து அசத்திய நடிகை தமன்னா தளபதி 66 படத்தில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக ஆகப் போகிறார் என சமீபத்தில் தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழில் வெளியான தோழா படத்தில் இவர் தான் ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X