நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிறார் தமன்னா... எந்த ஷோன்னு தெரியுமா?

ஐதராபாத் : சினிமாவில் டாப் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள் டிவி.,க்கு வருவது ஒன்றும் புதிதல்ல. இந்திய அளவில் பல பிரபலமான நிகழ்ச்சிகள் முன்னணி நடிகர்களைக் கொண்டே தொகுத்து வழங்கப்படுகிறது.

சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகர்கள் தான் டிவி.,க்கு வருவார்கள் என்ற கலாச்சாரத்தை உடைத்தவர் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தான். அவர் குரோர்பதி நிகழ்ச்சியை இந்தியில் தொகுத்து வழங்க துவங்கிய பிறகு அந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

அமிதாப் முதல் கமல் வரை

அமிதாப் முதல் கமல் வரை

அதைத் தொடர்ந்து தமிழில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சூர்யா, அரவிந்த்சாமி, சரத்குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நடிகைகளில் குஷ்பு, கோடீஸ்வரி, ஜாக்பாட் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸில் சமந்தா வரை

பிக்பாஸில் சமந்தா வரை

இவற்றை தாண்டி உலக அளவில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கான், மலையாளத்தில் மோகன்லால், தமிழில் கமல ஹாசன், தெலுங்கில் நாகர்ஜுனா, சமந்தா என டாப் நடிகர்கள் பலர் டிவி பக்கம் வந்து விட்டனர்.

டிவிக்கு வந்த தமன்னா

டிவிக்கு வந்த தமன்னா

இந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவாக தமன்னா இணைந்துள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இதே நிகழ்ச்சியை தான் தெலுங்கில் தொகுத்து வழங்க போகிறார் தமன்னா.

கடிகாரத்தில் க்ளூ வைத்த தமன்னா

கடிகாரத்தில் க்ளூ வைத்த தமன்னா

தான் டிவி.,க்கு வருவதை இன்ஸ்டாகிராமில், கம்மிங் சூன் என்ற கேப்ஷனுடன் 3 உணவு எமோஜிகளை வைத்து தெரிவித்துள்ளார். நீண்ட சில்வர் நிற உடையணிந்து, கடிகாரத்தில் நிகழ்ச்சியின் லோகோ இருக்கும் ஷுட்டிங்கில் பங்கேற்பது போன்ற ஃபோட்டோவை தான் தமன்னா பதிவிட்டுள்ளார்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இந்த நிகழ்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் மாஸ்டர்செஃப் தெலுங்கு நிகழ்ச்சியின் சமூக வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் தெலுங்கில், இந்தியாவில் தெலுங்கில் அறிமுகமாகும் மாஸ்டர் செஃப். விரைவில் ஜெமினி டிவி.,யில் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X