»   »  பாகுபலி கிளைமாக்ஸ்... ‘பூஜா’வோடு நண்பேன்டா ஆனார் தமன்னா!

பாகுபலி கிளைமாக்ஸ்... ‘பூஜா’வோடு நண்பேன்டா ஆனார் தமன்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக குதிரையேற்றப் பயிற்சிகளில் தினமும் ஈடுபட்டு வருகிறார் நடிகை தமன்னா.

வசூலில் சாதனை படைத்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட கலைஞர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர்.

பாகுபலி இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை மட்டும் 10 வாரங்கள் எடுக்க திட்டமிட்டுள்ளாராம் அதன் இயக்குநர் ராஜமௌலி.

குதிரையேற்றம்...

குதிரையேற்றம்...

முதல் பாகத்தில் கத்திச் சண்டை, வில் அம்பு எய்தல் என அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை தமன்னா. இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் அவர் குதிரைகளில் வந்து சண்டை போட இருக்கிறாராம்.

வீரதீர சாகச காட்சிகள்...

வீரதீர சாகச காட்சிகள்...

அதோடு இரண்டாம் பாகத்தில் தமன்னா, அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும், குறிப்பாக இருவரும் வீர தீர சாகச காட்சிகளில் அசத்த இருக்கிறார்களாம்.

குதிரையேற்றம்...

குதிரையேற்றம்...

ஏற்கனவே ருத்ரமாதேவி உள்ளிட்ட சரித்திரப் படங்களில் நடித்திருப்பதால் அனுஷ்காவிற்கு குதிரையேற்றம் உள்ளிட்ட பயிற்சிகள் தெரியும். ஆனால், தமன்னா இப்படத்திற்காகத் தான் குதிரையேற்றம் கற்றுள்ளார்.

பூஜா...

பூஜா...

எனவே, பூஜா எனப் பெயரிடப்பட்டுள்ள குதிரையுடன் தினமும் குதிரையேற்றப் பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாராம். குதிரையோடு தான் நிற்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தமன்னா.

ரிலீஸ்...

ரிலீஸ்...

முதல் பாகத்தைப் போலவே பிரம்மாண்டமாக உருவாகும், பாகுபலி - 2, அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Tamannaah Bhatia has kick started her training for Bahubali 2 as she has been learning horse riding for the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil