ஐஸ் பேபி ஐஸ்...அழகின் ரகசியத்தை வெளியிட்ட தமன்னா
சென்னை : 2006 ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனார் தமன்னா. பிறகு படிப்பாக வளர்ந்து விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, விஷால் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
கடைசியாக விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் நடித்தார் தமன்னா. அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புக்கள் இல்லாததாலும், தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் கமிட் ஆனதாலும் பிஸியாகி விட்டார் தமன்னா. அத்துடன் வெப்சீரிஸ், விளம்பர படங்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார்.

தொகுப்பாளரான தமன்னா
லேட்டஸ்டாக தெலுங்கில் ஜெமினி டிவி.,யில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க வந்துள்ளார். இதை நிகழ்ச்சியை தமிழில் சன் டிவி.,யில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி தொடர்பாக அடுத்தடுத்த ப்ரோமோக்கள் படுவைரலாகி வருகின்றன.

சோஷியல் மீடியாவிலும் பிஸி
படங்கள், டிவி நிகழ்ச்சி, விளம்பரங்கள் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் தனது ஃபோட்டோக்கள், வீடியோக்களை பகிர தமன்னா தவறியதே இல்லை. இதுவரை தான் ஒர்க்அவும் செய்யும் வீடியோக்களை வெளியிட்ட தமன்னா, தற்போது தனது முகம் அழகாக இருக்க காரணம் என்ன என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இதுதான் அழகின் ரகசியமா
இன்று இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட வீடியோவில் தினமும் காலையில் எழுந்ததும், ஒரு பவுலில் ஐஸ் கட்டிகளை வைத்து, அதற்குள் முகத்தை வைத்திருந்து எடுப்பாராம். இதனால் முகம் ஃபிரஷாகி, பளீச்சென அழகாகி விடுமாம். இது தான் அவரின் முகத்தின் அழகின் ரகசியமாம்.
Recommended Video

ஐஸ் பேபி ஐஸ்
இந்த பியூட்டி டிப்சை வீடியோவாக வெளியிட்டு, அதனை செய்தும் காட்டி உள்ளார் தமன்னா. ஐஸ் பேபி ஐஸ் என்ற கேப்ஷனுடன் தமன்னா வெளியிட்டுள்ள இந்த வீடியோ செமயாக வைரலாகி வருகிறது. இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











