»   »  ஆறு கிலோ எடை குறைந்து அழகு தேவதையாய் ஜொலிக்கும் தமன்னா!

ஆறு கிலோ எடை குறைந்து அழகு தேவதையாய் ஜொலிக்கும் தமன்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி படத்தில் இடம்பெறும் தமன்னாவின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். வெள்ளை உடையில் தங்க ஆபரணங்கள் மின்ன சாட்சாத் தேவைதைப் போலவே இருக்கிறார். டிசம்பர் 21 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய தமன்னாவிற்கு பிறந்தநாள் பரிசாக இந்த படத்தை வெளியிட்டார் தமன்னா.

சரித்திரப் படமான பாகுபலியில் பிரபாஸ் ஜோடியாக அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார். இந்த வேடத்துக்காக வெயிட்டை கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமௌலி சொல்லவே, ஆறு கிலோவை குறைத்துள்ளார் தமன்னா. இதனால் கூடுதல் அழகுடன் மிளிர்கிறார் தமன்னா.

(பாகுபலி படங்கள் )

சரித்திர படத்தில் தமன்னா

சரித்திர படத்தில் தமன்னா

தமிழில் கேடியில் அறிமுகமான தமன்னா, காதல், படிக்காதவன், சிறுத்தை, சுறா,வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது முதன் முறையாக ராஜமவுலி இயக்கத்தில் சரித்திர படத்தில் நடிக்கிறார் தமன்னா.

வாள் சண்டை

வாள் சண்டை

தமன்னாவுக்கு இதில் சண்டைக் காட்சிகள் உள்ளன. இதற்காக 6 கிலோ எடை குறைத்துள்ளார். இதனால் அழகும், கவர்ச்சியும் கூடுதலாக உள்ளது என்கிறார் தமன்னா.

அவந்திகாவாக தமன்னா

அவந்திகாவாக தமன்னா

நிறைய படங்களில் ரசிகர்கள் என்னை கவர்ச்சியாக பார்த்துள்ளனர். பாகுபலி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவந்திகா என்ற கேரக்டரில் நடிக்கிறேன் என்கிறார் தமன்னா.

வெள்ளை உடை தேவதை

வெள்ளை உடை தேவதை

நகைகள், காஸ்ட்யூம்கள் எல்லாமே சரித்திர காலத்தை பிரதிபலிக்கும். இந்த கேரக்டருக்காக எடை குறைக்கும்படி டைரக்டர் ராஜமவுலி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று கடும் பயிற்சிகள் செய்தேன். உணவு கட்டுப்பாட்டிலும் இருந்தேன். தற்போது ஆறு கிலோ எடை குறைத்துள்ளேன் என்கிறார் தமன்னா. இந்த படம்தான் அவரது பிறந்தநாளை ஒட்டி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

எல்லாம் ஒரிஜினல்தான்

எல்லாம் ஒரிஜினல்தான்

பாகுபலியில் குதிரை சவாரி செய்யும் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்திருக்கிறாராம் தமன்னா. இதற்காக குதிரையேற்றம் பயிற்சிகளும் எடுத்தாராம். தனது திரையுலக வாழ்க்கையில் பாகுபலி படத்திற்கு முக்கிய இடமுண்டு என்கிறார் தமன்னா.

English summary
Actress Tamannah is said to be busy with the big-ticket 'Bahubali' directedby SS Rajamouli of 'Naan Ee'-fame. The 'Siruthai' girl is supposed to have shot for some high octane action scenes during the schedule. It is said that Rajamouli had asked her to lose some 5-6 kgs to look the part and she had followed a stringent exercise and diet regimen to getinto shape.
Please Wait while comments are loading...