»   »  லேடி பிரபுதேவாவாக ’பேயாட்டம்’ ஆடப் போகும் ‘தேவி’ தமன்னா

லேடி பிரபுதேவாவாக ’பேயாட்டம்’ ஆடப் போகும் ‘தேவி’ தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்து வரும் படம் தேவி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

பேய்ப்படமான இதில் தமன்னா இரு வேடங்களில் நடித்து வருகிறார். அதாவது அக்கா, தங்கை. அதில் அக்கா பேயாகவும், தங்கை நடிகையாகவும் வருகிறார்.

இப்படம் தமிழில் தேவி என்றும், இந்தியில் டெவில் என்றும், தெலுங்கில் நடிகை என பொருள்படும் அபிநேத்ரி என்ற பெயரிலும் ரிலீசாகிறது.

மைக்கேல் ஜாக்சன்...

மைக்கேல் ஜாக்சன்...

ரப்பர் போன்று உடலை வளைத்து நெளித்து ஆடி இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனப் பெயரெடுத்தவர் பிரபுதேவா. அவர் நாயகனாக நடிக்கும் படத்தில் நடனத்திற்கு பஞ்சம் இருக்குமா என்ன.? அந்தவகையில் தேவியிலும் நடனக் காட்சிகளில் அசத்தி இருக்கிறார் பிரபுதேவா.

தமன்னா...

ஆனால், இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விசயம் என்னவென்றால் இந்தப் படத்தில் பிரபுதேவாவிற்கு இணையாக நடனத்தில் கலக்கியிருக்கிறார் தமன்னா. இது அவர்களது நடனப்பயிற்சி காட்சிகள் மூலமே உறுதியாகிறது.

வீடியோ...

ஒரு வீடியோவில் பிரபுதேவாவுடன் இணைந்து நடனம் ஆடுகிறார் தமன்னா. அதில் அவருக்கு ஈடுகொடுக்கும் விதமாக அவர் நடனம் ஆட முயற்சிக்கிறார்.

கலக்கல் டான்ஸ்...

அதேபோல், மற்ற இரண்டு வீடியோக்களில் தமன்னா மட்டும் நடனப் பயிற்சி மேற்கொள்கிறார். ஏற்கனவே இடுப்பை வளைத்து நெளித்து ஆடுவதில் வல்லவரான தமன்னா, இதில் மேலும் சிரத்தை எடுத்து ஆடிக் கலக்கியிருக்கிறார்.

பர்ஸ்ட் லுக்...

இந்த வீடியோக்களை பிரபுதேவாவும், தமன்னாவும் தங்களது டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Milky beauty Tamannah is presently working hard to dance in Prabhu Deva's movie Devi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil