»   »  எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது சமந்தா எத்தனை மார்க் எடுத்தார் தெரியுமா? வைரலாகும் மார்க் ஷீட்

எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது சமந்தா எத்தனை மார்க் எடுத்தார் தெரியுமா? வைரலாகும் மார்க் ஷீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, 10வது படிக்கும்போது என்ன மதிப்பெண் எடுத்திருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

தங்கள் பள்ளியின் சொத்து சமந்தா.. என்று சென்னையில் அவர் படித்த பள்ளிக்கூடம் நற்சான்றிதழ் கொடுத்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

Tamil actress Samantha mark sheet going viral

இவை அனைத்தையும், தெரிந்து கொள்ளும் வாய்ப்பை சமந்தாவே டிவிட்டர் மூலம் ரசிக கண்மணிகள் கவனத்திற்கு வழங்கியுள்ளார் பாருங்கள்.

"மம்மியும், நானும் எனது பழைய பள்ளி ரிப்போர்ட் கார்டை பார்க்க நேர்ந்தது. அம்மா பெருமிதப்பட்டார். நான் ஆச்சரியப்பட்டேன்" என்ற குட்டி முன்னுரையோடு சமந்தா பதிவு செய்துள்ள மார்க்ஷீட்தான் தற்போது டிவிட்டரில் வைரல்.

சென்னை, பல்லாவரத்தில் உள்ள சி.எஸ்.ஐ செயின்ட். ஸ்டீவன்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில்தான் 2001-2002ல் 10வது படித்துள்ளார் சமந்தா. அப்படீன்னா... அய்யோ.. சமந்தா, உங்களுக்கு கல்யாண வயசு தாண்டி போய்கிட்டு இருக்குறத கவனிக்கலியா.. நாக சைதன்யா வெய்ட்டிங்.

English summary
Tamil actress Samantha's 10th standard mark sheet going viral in twitter after she shares that in the micro blogging site.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil