»   »  'பிரிய மனசே இல்ல..' - ஃபீலிங்ஸ் பகிர்ந்த நடிகை தமன்னா!

'பிரிய மனசே இல்ல..' - ஃபீலிங்ஸ் பகிர்ந்த நடிகை தமன்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் 'கண்ணே கலைமானே' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

கொடைக்கானலில் நடைபெற்ற ஷூட்டிங் நேற்று முடிவடைந்துவிட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், 'கண்ணே கலைமானே' பட யூனிட்டை பிரிய மனமில்லாமல் பிரிந்ததாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.

தமன்னா

தமன்னா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவந்தவர் நடிகை தமன்னா. விஜய் சேதுபதி நடித்த 'தர்மதுரை' படத்தின் மூலம் தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களிலும் பிரபலமடைந்தார் தமன்னா.

கண்ணே கலைமானே படம்

இந்நிலையில் தமன்னா மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதியுடன் 'கண்ணே கலைமானே' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பேங்க் மானேஜராக நடித்துள்ளார் தமன்னா. இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முடிவடைந்தது.

சீனு ராமசாமி படம்

இந்தப் படம் பற்றி தமன்னா கூறுகையில், "சீனு ராமசாமி படத்தில் நடிப்பது மிகவும் இனிமையான அனுபவம். 'தர்மதுரை' படத்தில் எனக்கு ஒரு அழுத்தமான கேரக்டர் கொடுத்து என்னை தமிழகம் முழுவதும் பிரபலமடையச் செய்தார். அதே போல் 'கண்ணே கலைமானே' படத்திலும் ஒரு அழுத்தமான கேரக்டர் தந்துள்ளார்.

பிரிய மனம் இல்லை

பிரிய மனம் இல்லை

சமீபத்தில் தான் நான் நடிக்கவேண்டிய காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டு முடிந்தது. உண்மையாகவே இந்தப் படக்குழுவை பிரியவே மனமில்லாமல் பிரிகிறேன்" எனக் கூறியுள்ளார் தமன்னா. படக்குழுவே நெகிழ்ச்சியாக விடைபெற்றிருக்கிறது.

English summary
Udhayanidhi Stalin and Tamannah starred 'kanne kalaimaane' directed by Seenu Ramasamy shooting is completed. In this case, actress Tamanna spoke about shooting memories.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X