»   »  கஜோல் தங்கச்சிக்குக் கல்யாணம்

கஜோல் தங்கச்சிக்குக் கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

இந்தி திரையுலகின் முன்னாள் முன்னணி ஸ்டார் கஜோலின் தங்கச்சியும், உன்னாலே உன்னாலே படத்தின் நாயகியுமான தனிஷாவுக்கு கல்யாணம் நிச்சயமாகியுள்ளது.

கஜோலின் தங்கச்சியாக தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தனிஷா. முதல் படத்திலேயே மேல் தட்டு ரசிகர்களை வளைத்துப் போட்டு விட்டார் தனது நடிப்பால் தனிஷா.

தற்போது இந்தியில் நீல் அண்ட் நிகில் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனிஷா. இந்தப் படத்தின் நாயகன் உதய் சோப்ரா. இவர் இந்தித் திரையுலகின் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படும் யாஷ் சோப்ராவின் இளைய மகன் ஆவார்.

படத்தில் நடிக்கும்போது உதய்க்கும், தனிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் ரெட் போடாமல் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டனர். இதனால் காதல், சுபமாக முடிந்து கல்யாண உருவெடுத்துள்ளது.

சமீபத்தில்தான் உதய்யின் அண்ணன் ஆதித்யா சோப்ரா, பிரபல நடிகை ராணி முகர்ஜியை ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்தார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் உதய்யின் திருமண நிச்சயதார்த்த செய்தி வந்துள்ளது.

ஆதித்யா நிச்சயதார்த்தம் குறித்த செய்தி வெளியான பின்னர்தான் உதய்யின் திருமண நிச்சயதார்த்தம் குறித்து அப்பா சோப்ரா முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil