»   »  மாப்பிள்ளை வருணுக்கு 'நோ' சொன்ன த்ரிஷா: 'ஓகே' சொன்ன டாப்ஸி

மாப்பிள்ளை வருணுக்கு 'நோ' சொன்ன த்ரிஷா: 'ஓகே' சொன்ன டாப்ஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் த்ரிஷா அல்ல டாப்ஸி நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷாவின் வருங்கால கணவர் வருண் மணியன் ஜெய்யை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை தயாரிக்கிறார். படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது. ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்பட்டது.

இளம் ஹீரோக்களுடன் நடிக்க மறுப்பு தெரிவிக்காத த்ரிஷா ஜெய்யுடன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

த்ரிஷா

த்ரிஷா

ஜெய்யுடன் நடிப்பதா வேண்டாமா என்று பலத்த யோசனையில் இருந்தார் த்ரிஷா. ஏற்கனவே கை நிறைய படங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் எப்படி நடிப்பது என நினைத்தார்.

முடியாது

முடியாது

ஏற்கனவே பல படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதால் வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் நடிக்க நேரம் இல்லை என்று த்ரிஷா தெரிவித்தார். இதையடுத்து வேறு ஹீரோயினை தேடும் வேலையைத் துவங்கினர்.

டாப்ஸி

டாப்ஸி

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிப் படங்களில் நடித்து வருபவர் டாப்ஸி. அவரிடம் ஜெய்க்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்டுள்ளனர். அவரும் மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தை அளித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

த்ரிஷா, வருண் மணியனுக்கு நிச்சயம் நடந்துவிட்டாலும் திருமணத் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. த்ரிஷாவுக்கோ நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்துள்ளன. அதனால் தற்போதைக்கு திருமணம் இல்லை என்று கூறப்படுகிறது.

English summary
It is not Trisha but Tapsee who has agreed to act with Jai in a movie to be produced by Varun Manian.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil