»   »  வெள்ளை சேலைக்கு நோ… சிவப்பு சேலைக்கு எஸ் சொன்ன வெள்ளாவி நடிகை

வெள்ளை சேலைக்கு நோ… சிவப்பு சேலைக்கு எஸ் சொன்ன வெள்ளாவி நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவர்ச்சியாக நடிக்க எத்தனையோ நடிகைகள் தயாராக இருக்க மழை பாடல் காட்சியில் வெள்ளை சேலை கட்டி நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் வெள்ளாவி நடிகை டாப்ஸி

தமிழில் 'ஆடுகளம்', 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்' படங்களில் நடித்து பிரபலமான டாப்சி தற்போது லாரன்சுடன் ‘காஞ்சனா 2' என்ற பேய் படத்தில் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா இயக்கும் வைராஜா வை படத்திலும் நடித்துவரும் இவர் பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஒரு படம் கைவசம் உள்ளது.

கவர்ச்சிக்கு நோ

கவர்ச்சிக்கு நோ

வாய்ப்புக்காக ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க டாப்சி மறுத்து வருகிறார். நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்து உள்ளார்.

முத்தக்காட்சிக்கு நோ

முத்தக்காட்சிக்கு நோ

முத்த காட்சிகளில் நடிக்கவும் உடன்பாடு இல்லை என்று கூறி உள்ளார். அது மாதிரி நடிக்க வற்புறுத்தும் படங்களையும் தவிர்க்கிறார்.

வெள்ளை உடை கவர்ச்சி

வெள்ளை உடை கவர்ச்சி

சமீபத்தில் இந்தி படமொன்றில் அவர் நடித்துக் கொண்டு இருந்தபோது வெள்ளை சேலை உடுத்தி மழையில் நனைவது போன்ற காட்சியை எடுக்க இயக்குனர் விரும்பினார்.

சிவப்பு கொடுங்க

சிவப்பு கொடுங்க

டாப்ஸி உடுத்த வெள்ளை சேலை கொடுக்கப்பட்டது. அந்த சேலையை உடுத்திக் கொண்டு நனைந்தால் உடம்பு முழுவதும் தெரிந்து, ஆபாசமாக இருக்கும் என்று கூறி அப்படி நடிக்க மறுத்து விட்டாராம். பிறகு சிவப்பு நிற சேலையை கொடுத்தனர்.

மழை டான்ஸ்

மழை டான்ஸ்

ஒரு வழியாக சிவப்பு சேலையை உடுத்திக் கொண்டு மழையில் நனைந்து ஆடிப்பாடி நடித்தாராம். ஒருவழியாக எப்படியோ எடுத்து முடித்தாராம் பாலிவுட் இயக்குநர்.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு முனகினாராம் இயக்குநர்.

English summary
Actress Tapsee has refused to wear white sarree, instead she opted for hot red in a song scene.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil