»   »  பஸ்ஸில் ஆண்கள் என்னை கண்ட இடத்தில் தொட்டுள்ளனர்: டாப்ஸி ஓபன் டாக்

பஸ்ஸில் ஆண்கள் என்னை கண்ட இடத்தில் தொட்டுள்ளனர்: டாப்ஸி ஓபன் டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டெல்லியில் படிக்கும் காலத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது கண்ட இடத்தில் தொட்டு ஆண்கள் வம்பிழுத்ததாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து வருபவர் டாப்ஸி. அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ள பிங்க் இந்தி படம் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் டாப்ஸி ஈவ் டீஸிங் பற்றி கூறுகையில்,

டெல்லி

டெல்லி

நான் டெல்லியில் இருந்த போது தினமும் ஈவ் டீஸிங் நடந்துள்ளது. நான் இரண்டு ஆண்டுகள் கல்லூரிக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தேன். அதன் பிறகு 19 வயதில் கார் வாங்கினேன்.

பேருந்து

பேருந்து

நான் கார் வாங்கும் முன்பு டிசிசி பேருந்துகளில் பயணம் செய்தேன். பேருந்தில் ஆண்கள் கிண்டல் செய்ததுடன் கண்ட இடங்களில் எல்லாம் என்னை தொட்டார்கள்.

நெரிசல்

நெரிசல்

டெல்லியில் திருவிழாக் காலங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு சென்றபோது எல்லாம் ஆண்கள் பெண்களை கண்ட இடங்களில் தொடுவார்கள். இது டெல்லியில் வழக்கமான ஒன்று. இது எனக்கும் நடந்துள்ளது.

ஒன்னும் செய்யவில்லை

ஒன்னும் செய்யவில்லை

ஆண்கள் என்னை கண்ட இடங்களில் தொட்டபோது அதை எதிர்த்துக் கேட்காமல் என் தவறு போன்று நினைத்து ஓடினேன். அங்கு போகாதே, அந்த உடை அணியாதே, அதை செய்யாதே, இதை செய்யாதே என்று சொல்லி வளர்த்துவிட்டார்களே.

English summary
Actress Tapsee has talked about eve teasing and getting touched inappropriately in DTC buses during her college days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X