»   »  கோபக்கார தாரிகா

கோபக்கார தாரிகா

Subscribe to Oneindia Tamil

கோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோக்கள் மீது மகா கடுப்பில் இருக்கிறார் தாரிகா.
ஆநான் தமிழச்சி என்ற ஒரே காரணத்துக்காக என்னை ஒதுக்கிறார்கள் இந்த தமிழ் சினிமாக்காரர்கள்என்கிறார்.

நானும் மும்பைல இருந்து வந்தேன், பெங்களூரில் இருந்து வந்தேன்னு பொய் சொல்லிவிட்டு,தமிழில் பேசாமல் இருந்திருந்தால் ஒரு வேளை மதித்திருப்பார்கள். ஆனால், நான் தமிழ்ப் பெண்என்ற காரணத்தால் இங்கே செகண்ட் ஹீரோயின் ரோல் கூட தர மறுக்கிறார்கள் என்கிறார் கோபக்காரதாரிகா.

பாலசந்தரின் மர்ம கவிதைகள் டிவி சீரியல் மூலம் கலையுலகுக்கு வந்த தாரிகா பின்னர் சித்திசீரியலிலும், கங்கா யமுனா சரஸ்வதி சீரியலிலும் நடித்தார். சீரியல் உண்டு, தானுண்டு என்றுஇருந்தவரை இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது ஈர நிலம் படத்தின் மூலம் சினிமாவுக்குக்கொண்டு வந்தார்.

அந்தப் படமே போண்டியாகிவிட, அதில் நடித்த தாரிகாவைக் கண்டு கொள்ளவும் ஆளில்லாமல்போய்விட்டது. சினிமாவை நம்பி டிவி சீரியல்களை குறைத்த தாரிகாவின் பாடு திண்டாட்டமாகிப்போனது.

இதனால் வெட்கத்தைவிட்டு தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்கு படியேறினார் தாரிகா.ஆனால், இவர் நல்ல தமிழில் பேசியதாலோ என்னவோ, கூப்பிட்டு கடலை போட்டுவிட்டு திருப்பிஅனுப்புவதிலேயே குறியாய் இருந்தார்கள்.

ஆனாலும் விடாமல் தாரிகா நடத்திய தீவிர சான்ஸ் வேட்டைக்கு கிடைத்த பரிசு தான்,புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டு சரக்கு நச்சுன்னு தான் இருக்கு என்றபாட்டுக்கு ஆடும் வாய்ப்பு.

அதைத் தொடர்ந்து, டிரஸ் எல்லாம் போட்டு கஷ்டப்பட வேண்டாம்.. சும்மா இதை சுத்திக்கிட்டு ஆடு,என்று சொல்லி சில குத்தாட்டும் போடும் சான்ஸ்கள தொடர்ந்து வர, 4 த ஸ்டூடண்ட்ஸ் என்றமலையாளப் பட சான்ஸை மட்டும் ஏற்றுக் கொண்டு, மற்ற ஒத்தை ஆட்டவாய்ப்புக்களையெல்லாம் தவிர்த்துவிட்டார் தாரிகா.

மீணடும் நல்ல ரோல்கள் தேடி தயாரிப்பாளர்களின் படியேறிக் கொண்டிருக்கிறார். அப்படி இப்படிஎன தாரிகா நடத்திய வேட்டைக்குப் பரிசாக சுபம், ஸ்கூல் ஆகிய மகா சின்ன பட்ஜெட் படவாய்ப்புக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கிடைத்தவரை லாபம் என்பதால் அவற்றை ஏற்றுக்கொண்டுவிட்டார் தாரிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil