»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஒற்றன் படத்தில் சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்ற பாடலுக்கு அர்ஜூனுடன் செம குத்துகுத்தியவர் தேஜாஸ்ரீ.

படம் பிளாப், ஆனாலும் தேஜாஸ்ரீ க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சிங்கிள் டான்சுக்கு ஆட்டம் போட வைக்க பல டைரக்டர்களும் வரிசையில் நிற்க வெறுத்துப் போய் ஆந்திராவுக்கே போய்விட்டார்தேஜாஸ்ரீ.

அங்கு ஏதும் ஒர்க் ஆவுட் ஆகவில்லை. இதனால் மீண்டும் தமிழுக்கு வந்தவர், ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடமாட்டேன் என்று அடம் பிடித்தார்.

இதனால் நோ சான்ஸ். சும்மா வீட்டில் இருந்தவர் அவ்வப்போதுடைரக்டர்களை போய்ப் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்தார்.

கை மேல் பலன். இப்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த வாய்ப்பை வழங்கியிருப்பவர்சுந்தர்.சி.

பிரஷாந்தை வைத்து இவர் இயக்கிய வின்னர் படம் வசூலில் ஓரளவுக்கு லாபம் பெற்றுத் தந்தது, சுந்தர்.சிக்கு நல்லபெயரைத் தந்துள்ளது. தொடர்ச்சியாக வெட்டுக்குத்து, துப்பாக்கிச் சூடு படங்களாக வந்த சமயத்தில், முழுக்கமுழுக்க காமெடியாக தந்ததால் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

மாபெரும் வெற்றியைப் பெறாவிட்டாலும், வடிவேலுவின் தூள் பறத்தும் காமெடியால், நஷ்டக்கணக்கில் இருந்துபடம் தப்பியது. இதனால் சுந்தர்.சிக்கும் அடுத்த படத்தை இயக்கும் சான்ஸ் கிடைத்துள்ளது. அதற்குத்தயாராகிவிட்ட சுந்தர்.சி தேஜாஸ்ரீயை கதாநாயகி ஆக்கியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil