»   »  'சிங்கிளுக்கு' தேஜாஸ்ரீ ஸாரி!

'சிங்கிளுக்கு' தேஜாஸ்ரீ ஸாரி!

Subscribe to Oneindia Tamil


குத்துப் பாட்டின் மூலம் புகழுச்சிக்குப் போன தேஜாஸ்ரீ, இனிமேல் அப்படிப்பட்ட பாட்டுக்களுக்கு ஆட மாட்டாராம். சமீபத்தில் இரண்டு முன்னணி ஹீரோக்களின் குத்துப் பாட்டுக்கு ஆட வந்த வாய்ப்பையும் அவர் வேண்டாம் என்று கூறி விட்டாராம்.

Click here for more images

நாயகியாக நடிக்க வந்த தேஜாஸ்ரீ, எதிர்பாராத விதமாக குத்துப்பாட்டுக்கு ஆடப் போய் பிரபலமானவர். ஒற்றன் படத்தில், அர்ஜூனுடன் சேர்ந்து சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா என்ற பாடலுக்கு அவர் போட்ட ஆட்டத்தைப் பார்த்து தமிழ் ரசிகர்கள் வியர்ந்து வியர்த்துப் போனார்கள்.

இந்தப் பாட்டைத் தொடர்ந்து நிறையக் குத்துப் பாட்டு வாய்ப்புகள் தேஜாஸ்ரீயைத் தேடி வந்தன. ஆனாலும் அவரது மனசுக்குள் ஹீேராயின் கனவு இருந்து கொண்டே இருந்தது. விவேக்கின் முதல் ஹீரோ படமான சொல்லி அடிப்பேனில் 2 நாயகியரில் தேஜாஸ்ரீயும் ஒருவர்.

இப்ேபாது நடிகை என்ற படத்தில் நடித்து வருகிறார் தேஜாஸ்ரீ. இந்தப் படத்தில் தனது முழுத் திறமையையும் கொட்டி நடித்து வருகிறாராம். இந்தப் படம் வந்தால் தெரியும் நான் யாரென்று என்று மார் தட்டிக் கூறி வருகிறார் தேஜாஸ்ரீ.

இந்த நிலையில் அவரைத் தேடி இரண்டு மராத்தி படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் வந்துள்ளதாம். இதனால் மும்பைக்குப் பறந்துள்ளார் தேஜாஸ்ரீ. இவருடைய திறமையை உணர்ந்த போஜ்புரி சினிமாக்காரர்களும் இங்கும் வாங்க என்று அழைப்பு விடுத்து வருகிறார்களாம்.

ஹீரோயின் வாய்ப்புகள் தன்னைத் தேடி வர ஆரம்பித்துள்ளதால் இனிமேலும் குத்துப் பாட்டுக்கு ஆட முடியாது என்று முடிவெடுத்துள்ளார் தேஜாஸ்ரீ. சமீபத்தில் இரு முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒத்தப் பாட்டுக்கு ஆட வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம்.

இதுகுறித்து தேஜாஸ்ரீ கூறுகையில், இப்போது 4 மொழியில் 7 படங்களில் கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கும் ஒரு பிசியான நடிகை நான். கடந்த வாரம் கூட ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தத்தல் கையெழுத்து போட்டுள்ளேன்.

எனவே இனிமேலும் நான் குத்துப் பாட்டுக்கு ஆட மாட்டேன். எக் காரணம் கொண்டும் நான் ஒத்தப் பாட்டுக்கு இனிமேல் ஆட மாட்டேன்.

தமிழில் நான் நடித்துவரும் 'நடிகை' படம் வந்தபிறகு என்னுடைய ரேஞ்சே மாறிவிடும் என்று தெம்பாக கூறுகிறார் தேஜாஸ்ரீ.

Read more about: tejashree
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil