»   »  "சில்க்"கை முந்துவாரா தேஜாஸ்ரீ ?

"சில்க்"கை முந்துவாரா தேஜாஸ்ரீ ?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சில்க் ஸ்மிதா அளவுக்கு தேஜாஸ்ரீ வருவாரா என்பது அது ஒரு கனாக்காலம் வெளிவந்தால் தெரியும்.

மூன்றாம் பிறையில் கமல், ஸ்ரீதேவியின் நடிப்பு, பாலுமகேந்திராவின் கேமரா, அட்டகாசமான கதை என பல அம்சங்கள் பளிச்சிட்டாலும்அதையும் மீறி இன்னும் நம் மனக் கண்ணில் நிழலாடுவது, சில்க் ஸ்மிதாவின், "பொன் மேனி உருகுதே பாடல்தான்.

அந்த அளவுக்கு அருமையான டான்ஸ் மூவ்மென்ட்ஸ், இசை, ஜானகியின் ஸ்வீட் வாய்ஸ், சில்க்கின் நளினம் என பாட்டுக்குப் பலம் சேர்த்தவிஷயங்கள் பல. இன்று கேட்டாலும் அந்தப் பாட்டு அப்படியே சிலிர்க்க வைக்கும்.

மூன்றாம் பிறைக்கு வெயிட் கொடுத்த பொன்மேனி போல, "அது ஒரு கனாக்காலம் படத்திலும் ஒரு பாட்டை வைத்துள்ளார் பாலுமகேந்திரா. பொன்மேனியைப் போல வர வேண்டும் என்று நினைத்து அதை அவர் வைக்கவில்லையாம்.

எதேச்சையாக அமைந்தது என்று பாலு மகேந்திரா கூறினாலும் கூட, மூன்றாம் பிறையை இந்தப் பாடல் தூக்கிச் சாப்பிடும் என்கிறார்கள்.

இந்தப் பாட்டுக்கு தேஜாஸ்ரீ நடனமாடியுள்ளார். இளையராஜாவின் இசையில் பாட்டு அட்டகாசமாக வந்துள்ளதாம். இந்தப் பாட்டு தனக்குபெரும் திருப்புமுனையாக அமையும் என்று சந்தோஷமாக கூறுகிறார் தேஜாஸ்ரீ.

சின்ன வீடா வரட்டுமா மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த தேஜாஸ்ரீ, இந்தப் பாட்டின் மூலம் சில்க் ஸ்மிதா போல உச்சத்தைத்தொடுவார் என்று பாலுமகேந்திராவே பாராட்டினாராம்.

பாலு மகேந்திரா சார் போன்ற பெரிய இயக்குனரின் வாயால் நான் பாராட்டப்பட்டது ரொம்பப் பெருமையாகஇருக்கிறது.

சில்க் ஸ்மிதா அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட இந்தப் பாடலுக்கு நன்றாக டான்ஸ் ஆடியுள்ளேன் என்றுதான் நினைக்கிறேன். மிகவும்சிரமப்பட்டு இந்தப் பாடலுக்கு ஆடினேன். டான்ஸும், பாட்டும் அருமையாக வந்துள்ளது.

இளையராஜா சாரின் இசையும் பாடலும் நன்றாக வந்ததும் ஒரு காரணம். சில்க் ஸ்மிதாவுடன் என்னை ஒப்பிட்டு இப்போதே பேசுவதுசந்தோஷமாக இருக்கிறது என்கிறார் தேஜாஸ்ரீ.

தேஜாஸ்ரீ இப்போது படு பிசி. "அது ஒரு கனாக்காலம் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதைப் போல நிறையப் படங்களில் ஆடிவருகிறாராம்.

"தகதிமிதா, "அந்த நாள் ஞாபகம், விவேக்குடன் "சொல்லி அடிப்பேன், "நீயே நிஜம் என அவரது கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்.

நல்லா வந்தா சரி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil