»   »  சமந்தா பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்!

சமந்தா பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : பிரதியுஷா எனும் தொண்டு நிறுவனம் மூலம் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சமந்தா, பல குழந்தைகளுக்கு மருத்துவ உதவி புரிந்து வருகிறார். பல இதய அறுவை சிகிச்சைகளையும் நடத்தி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சமந்தா தெலுங்கானா அரசின் கைத்தறி ஆடைத் தூதராகவும் செயல்பட்டு வருகிறார். கைத்தறி நெசவாளர்களின நிலையைச் சொல்லி, அவர்களின் வாழ்வியலுக்காக கைத்தறி விளம்பர தூதராக இலவசமாக நான் செயல்படுகிறேன் என்றும் சமந்தா தெரிவித்திருந்தார்.

Telengana minister clarifies about samantha rumour

ஆனால், எல்லா நடிகர் நடிகைகளும் போலவே இதற்காக சமந்தா பெரும் தொகையை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், தெலுங்கானா அமைச்சர் கே.டி.ஆர் இதுபற்றி கூறுகையில், இந்த பணிக்காக சமந்தா ஒரு பைசாகூட சன்மானமாக பெறவில்லை. இதை ஒரு சமூக சேவை போன்றே இலவசமாக செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கான அமைச்சர் இதன்மூலம் சமந்தா பற்றி வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தெலுங்குதேசத்தின் மருமகளாகியிருக்கும் சமந்தாவை தெலுங்கு ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

English summary
Samantha is working as Handloom volunteer ambassador of Telangana government. Telangana Minister KTR said, "Samantha doing this for free and she is works it as a social service."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X