»   »  தலைகீழ் - ஒரு பயானுபவம்!

தலைகீழ் - ஒரு பயானுபவம்!

Subscribe to Oneindia Tamil
Tejamai
தலைகீழ் - ஒரு பயானுபவம்!

தலைகீழ் படத்தின் குழுவினர் அந்தப் படத்தை எடுத்ததை விட சந்தித்த அனுபவங்கள் படு திகிலாக உள்ளன.

ரெக்ஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தலைகீழ். சமீபத்தில்தான் படப்பிடிப்பு முடிந்தது. சமீபத்தில் பாடல் வெளியீடு நடந்தது. அப்போது படப்பிடிப்பின்போது சந்தித்த திகிலான அனுபவங்களை ரெக்ஸ் ராஜ் பகிர்ந்து கொண்டார். அவர் கூறக் கூற படத்தை விட அது படு திகிலாக இருந்தது.

முதலில் நாயகி தேஜாமயிக்கு ஏற்பட்ட அனுபவம். படப்பிடிப்பில் ஆட்டோ துரத்தல் காட்சி ஒன்றில் நடித்தபோது அவர் மயங்கி விழுந்து விட்டாராம். பின்னர் வனப்பகுதியில் நடந்த படப்பிடிப்பின்போது பெரிய நாகப் பாம்பு படம் எடுத்து ஆடி அனைவரையும் அலற வைத்துள்ளது.

நாகப் பாம்பைப் பார்த்து படப்பிடிப்புக் குழுவினர் பயந்து ஓடியுள்ளனர். இந்த துயரத்திலிருந்து மீண்டு அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது, 60 அடி பள்ளத்தில் உதவி இயக்குநர் ஒருவர் விழுந்து விட்டாராம். ஹீரோவுக்கு காட்சியை விளக்கிக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் விழுந்துள்ளார் அவர்.

வனப்பகுதியில் வசித்து வரும் கிராமத்தினர் தக்க சமயத்தில் அவரை காப்பாற்றி மீட்டனராம்.

அதேபோல வில்லன் துரத்தும் காட்சியில் 2வது நாயகி நிவேதிதா தவறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டாராம்.

இப்படி பல சிக்கல்களைத் தாண்டி ஒரு வழியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனராம்.

திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரெக்ஸ் ராஜ் இவற்றை வர்ணித்தபோது அரங்கமே அதை திகிலுடன் கேட்டது.

படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஆதிஷ் என்ற புதுமுகம். இவருக்கும், இசையமைப்பாளர் தேவாவுக்கும் நல்ல நட்பு உள்ளதாம். அந்த நட்பின் காரணமாக தேவாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தேவாவுடன் சில காலம் இணைந்து பணியாற்றியுள்ளாராம் ஆதிஷ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil