»   »  கெட்டது எழுதுபவனை பிடி, நல்லது எழுதுபவனை விட்டுடு: டாப்ஸிக்கு 'தல' அட்வைஸ்

கெட்டது எழுதுபவனை பிடி, நல்லது எழுதுபவனை விட்டுடு: டாப்ஸிக்கு 'தல' அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரம்பம் படத்தில் நடிக்கும்போது அஜீத் குமார் கூறிய அறிவுரையை டாப்ஸி தற்போதும் பின்பற்றுகிறாராம்.

தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் பஞ்சாபி பொண்ணான டாப்ஸி பண்ணு. தமிழ் திரையுலகில் பெரிய அளவில் வர முடியாவிட்டாலும் தெலுங்கு, இந்தி பக்கம் சென்று ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது அவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

அஜீத்

அஜீத்

அஜீத்தின் ஆரம்பம் படத்தில் டாப்ஸி ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படப்பிடிப்பின்போது அஜீத் டாப்ஸிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதை டாப்ஸி தற்போதும் மனதில் வைத்து பின்பற்றுகிறார்.

அறிவுரை

அறிவுரை

நம்மை பற்றி நல்லது வருவதை விட்டுவிடு. அதை நம்மை பிடித்த யாரோ எழுதியிருப்பார்கள். நம்மை பற்றி வரும் நெகட்டிவ் விமர்சனங்களை மனிதல் கொள்க. அதை வைத்து தான் நாம் நம் தவறுகளை திருத்தி முன்னேற வேண்டும் என தல டாப்ஸியிடம் கூறினாராம்.

டாப்ஸி

டாப்ஸி

அஜீத் அப்போது எனக்கு கூறிய அறிவுரையை மனதில் வைத்து இன்றும் பின்பற்றுகிறேன். அவர் கூறியது 100க்கு 100 உண்மை என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

காதல்

காதல்

நடிகைகளின் காதல் பற்றி கிசுகிசுக்கள் வரும்போது டாப்ஸி பற்றி மட்டும் எதுவும் வருவது இல்லை. அவர் உண்டு, படங்கள் உண்டு, விளம்பர படங்கள் உண்டு என்று இருக்கிறார்.

English summary
Tapsee said that she still follows one advice by Thala Ajith Kumar. Ajith advised her to concentrate on negative comments to correct one's mistake inorder to grow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil