»   »  கபாலி 100வது நாள் விழா... ரசிகர்கள் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசளித்த தன்ஷிகா!

கபாலி 100வது நாள் விழா... ரசிகர்கள் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசளித்த தன்ஷிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிகப் பெரிய வெற்றிப் படமான கபாலியின் 100 வது நாளையொட்டி, ஆதம்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரசிகர்கள் சார்பில் இனிப்பு, உணவு, பட்டாசுகள் மற்றும் பரிசுகள் வழங்கினார் நடிகை சாய் தன்ஷிகா.

கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியான ரஜினியின் கபாலி படம், இந்திய சினிமா சரித்திரத்தில் புதிய வசூல் சாதனைகளைப் படைத்து வெற்றி வாகை சூடியது. சர்வதேச அளவிலும் பல சாதனைகளைப் படைத்த ஒரே தமிழ்ப் படம் கபாலி.

Thalaivar's Murattu Bakthargal celebrates Kabali 100th day

வரும் தீபாவளி தினமான அக்டோபர் 29 அன்று கபாலி 100 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த நூறாவது நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரஜினியின் முரட்டு பக்தர்கள் குழு சார்பாக ஆதம்பாக்கத்தில் உள்ள 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள், பட்டாசு, உணவு, இனிப்பு, நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாய் நடித்த சாய் தன்ஷிகா பங்கேற்று ரசிகர்கள் சார்பில் குழந்தைகளுக்கு அனைத்துப் பரிசுகளையும் வழங்கினார்.

English summary
Rajinikanth's Murattu Bakthargal group was celebrated Kabali 100th day event at an orphanage with Kabali star Dhanshika

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil