»   »  தனி ஒருவன்: தடயவியல் நிபுணராக வரும் நயன்தாரா

தனி ஒருவன்: தடயவியல் நிபுணராக வரும் நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் தனி ஒருவன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகின்றது, இந்தப் படத்தில் நயன்தாரா போலீசாக நடிக்கிறார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அது உண்மை அல்ல நாயகன் ஜெயம் ரவி இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார், இந்தப் படத்தில் முதன்முறையாக தடயவியல் அதிகாரியாக நடித்திருக்கிறார் நயன்தாரா.


Thani Oruvan: Nayanthara to Play a Forensic Expert?

சமூக அக்கறையுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் மோகன் ராஜா கூறியிருக்கிறார், படத்தில் குற்றங்களைக் கண்டுபிடிப்பவராக ஜெயம் ரவியும் அந்தக் குற்றங்களின் பின்னணியைக் கண்டுபிடிப்பவராக நயன்தாராவும் இணைந்து நடித்திருக்கின்றனர்.


Thani Oruvan: Nayanthara to Play a Forensic Expert?

ரோஜா நாயகன் அரவிந்த் சாமி படத்தில் வில்லனாக அவதாரம் எடுக்க, ஹிப்ஹாப் தமிழன் ஆதி படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். தனி ஒருவன் படத்தின் டீசர் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.


ஜெயம், எம்.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் மோகன் ராஜா ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு கடும் எதிர்பார்ப்பு உள்ளது.

English summary
Thani Oruvan nayanthara to play a Forensic Expert in this movie. Starring Jeyam Ravi, Nayanthara Aravind Sami in the lead roles.
Please Wait while comments are loading...