»   »  சமிக்ஷா, தாரிகாவின் தவிப்பு!

சமிக்ஷா, தாரிகாவின் தவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலை நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற விமானத்தை தவற விட்டு விட்டு தாரிகாவும், சமிக்ஷாவும் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பரிதவித்து பரிதாபத்துக்குரிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கலை நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற விமானத்தை தவற விட்டு விட்டு தாரிகாவும், சமிக்ஷாவும் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பரிதவித்து பரிதாபத்துக்குரிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த கலை விழா நடைபெற்றது.

இதில் நடிகர் பரத், நடிகைகள் சந்தியா, உயிர் சங்கீதா, சமிக்ஷா, தாரிகா, மும்தாஜ், கனிகா, பாடகி அனுராதா ஸ்ரீராம், பாடகர் கார்த்திக், நடன இயக்குனர் கந்தாஸ் உள்பட 40 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு தொடங்கியது. 18,000 ரசிகர்கள் திரண்டு வந்து தங்களது இஷ்ட தேவதைகளையும், அவர்கள் வழங்கிய நிகழ்ச்சிகளையும் கண்டு பேரானந்தம் அடைந்தனர்.

நிகழ்ச்சி முடிந்து சனிக்கிழமை தாரிகா, சங்கீதா, சமிக்ஷா, கனிகா, பாடகர், பாடகிகள் துபாயிலிருந்து சென்னைக்கு கிளம்பினர். விமான நிலையத்துக்கு வந்த அவர்கள் பாஸ்போர்ட் சோதனை மற்றும் உடமைகள் சோதனைகள் முடிந்து அனைவரும் விமானத்தில் ஏறத் தயாராக இருந்தனர்.

விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்னதாகவே அனைவரும் விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். இந்த சமயத்தில் தாரிகாவும், சமிக்ஷாவும் டைம் இருக்கிறதே, அதற்குள் ஷாப்பிங் போய் விட்டு வந்து விடலாம் என கடைக்குக் கிளம்பினர்.

பெண்கள் ஷாப்பிங்குக்குத்தான் நேரம் காலம் கிடையாதே, பொருட்களை பார்த்த பேருவகையில் நேரம் போவது தெரியாமல் இருவரும் கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த களேபரத்தில் விமான நேரத்தை மறந்து இருவரும் நெடு நேரம் ஷாப்பிங் செய்தனர். இதனால் இருவரும் விமானத்தை தவறவிட்டனர்.

ஷாப்பிங் முடிந்து திரும்பி வந்த சமிக்ஷாவும், தாரிகாவும் விமானம் புறப்பட்டுவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருவரும் சுமார் 12 மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருந்து, மறுநாள் கிளம்பிய விமானத்தில் சென்னை வந்தடைந்தனர்.

இந்த குழப்பம் குறித்து சமிக்ஷா கூறுகையில், விமானம் புறுப்படுவதற்கு நேரம் இருந்ததால் நானும், தாரிகாவும் ஷாப்பிங் போனோம். திரும்பி வந்து பார்த்தால் விமானம் கிளம்பிப் போய் விட்டது.

அதிர்ச்சி அடைந்த நாங்கள் அடுத்த விமானத்தில் புறப்பட்டு விடலாம் என்று எண்ணி விமான நிலையத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தோம். ஆனால் நேரம் ஆக ஆக பயமாகி விட்டது. நடந்து, நடந்து எங்களது கால்கள் மறத்துப் போய் விட்டன.

கிட்டத்தட்ட 12 மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டியதாகி விட்டது. அடுத்த நாள் காலையில்தான் விமானம் கிடைத்து, ஊரைப் பார்க்க வந்து சேர்ந்தோம். அய்யோ கடவுளே இந்த அனுபவத்தை மறக்கவே முடியாதுப்பா என்று கிலி விலகாத நிலையில் சொல்லி முடித்தார்.

பொண்ணுங்க கடைக்குப் போனா இப்படித்தான் நடக்கும் என்பதற்கு சமிக்ஷா, தாரிகா சரியான உதாரணம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil