»   »  தாரிகாவின் தேடல்

தாரிகாவின் தேடல்

Subscribe to Oneindia Tamil

தாரிகாவுக்கு கவர்ச்சி ஆட்டங்களில் அதிகம் விருப்பமில்லையாம். கேரக்டர் ரோல்தான் வேண்டும் என்கிறார். இதனால் ஒத்தை ஆட்டம் போட வந்த பல வாய்ப்புக்களையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தை பலர் மறந்து போயிருக்கலாம். ஆனால் அந்தப் படத்தில், நாட்டுச் சரக்கு நச்சுனுதான் இருக்கு என்ற பாடலுக்கு உடைகளை உருவிப் போட்டு ஆட்டம் போட்ட தாரிகாவை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. ஆண்களுக்கு சவால் விடும் உயரம், மதமதப்பான உடல் என உண்மையாகவே நச்சுனு ஆட்டம் போட்டிருப்பார்.

அதனாலேயே வாய்ப்புகள் இவர் பக்கம் குவிந்தன. ஆனால் வருவது எல்லாம் அயிட்டம் நம்பர் ஒன் வகைப் பாடல்கள். இதில் தாரிகாவுக்கு சுத்தமாக விருப்பமில்லையாம். நல்ல ரோல்களில் நடித்து கேரக்டர் நடிகை என்று பெயர் வாங்கவே விருப்பம் என்று சொல்லி ஒதுக்கிவிட்டார்.

இதனால் வாய்ப்பில்லாமல் வீட்டில் சும்மா இருந்தார். இந் நிலையில் அவர் விரும்பியபடி ஒரு ரோல் கிடைத்துள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த அபிநய் ஹீரோவாக நடிக்கும் சுபம் என்ற படத்தில் ஹீரோயினாக புக் ஆகியிருக்கிறார் தாரிகா.

இதற்கிடையே நல்ல ரோல் எனும்போது சொந்தக் குரலில் பேசினால்தான் மதிப்பு என்பதை ஒரு கோடம்பாக்கம் குருவி தாரிகாவின் காதில் ஓத, இப்போது அவர் அ, ஆ, இ, ஈ தமிழ் கற்று வருகிறார்.

அத்தோடு நல்ல ரோல்களைத் தேடிக் கொண்டே இருக்கிறார்.

மீண்டும் ரம்பா:

நல்ல ரோல்தான் வேண்டும் என்று தாரிகா சொல்லிக்கொண்டிருக்கையில், ஒரு பாட்டுக்காவது என்னைக் கூப்பிடுங்கள் என்கிறார் ரம்பா.

ஒரு காலத்தில் இளைஞர்களை ராத்தூக்கமிழக்கச் செய்த ரம்பா பின்னர் சிம்ரன், ஜோதிகா, மும்தாஜ் காரணமாக வாய்ப்பிழக்க ஆரம்பித்தார். இதனால் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடவும் தயாராகி சில வாய்ப்புகளையும் பெற்றார்.

பின்னர் இந்த வாய்ப்புகளும் குறையவே, ஜோதிகா, லைலாவுடன் கூட்டணி வைத்து கோவிந்தாவின் மறைமுக நிதியுதவியுடன் த்ரிரோஸஸ் என்ற படத்தைத் தயாரித்தார். படம் ஊத்திக் கொள்ளவே வெறுத்துப் போய் விட்டார்.

பட வாய்ப்புகள் குறைந்து போனதால், இடையில் பாஜகவில் சேரப் போவதாக நூல் விட்டுப் பார்த்தார். வாஜ்பாயை விமான நிலையம் வரை சென்று சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அரசியலில் நான் சேர மாட்டேன் என்று பின்னர் ஒரிஜினல் அரசியல்வாதிகளைவிட படு லாவகமாக டைவ் அடித்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதில் தீவிர கவனம் காட்டத் தொடங்கியுள்ளார்.

அவரது விடா முயற்சியின் காரணமாக சரத்குமார் நடிக்கும் சத்ரபதி படத்தில் ஒரு பாட்டுக்கு திடூம் ஆட்டம் போடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil