»   »  நிஜமாகவே மொட்டை அடித்துக்கொண்ட நடிகை... ஏன்?

நிஜமாகவே மொட்டை அடித்துக்கொண்ட நடிகை... ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கி உள்ள படம் 'அபியும் அனுவும்'. மலையாள நடிகர் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோஹினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்காக நடிகை பியா மொட்டை போட்டுள்ளார். அவர் மொட்டைத்தலையுடன் இருக்கும் சில காட்சிகள் ட்ரெய்லரில் வந்தன.

இந்தப் படத்திற்காக மொட்டை போட்டுக்கொண்டு நடித்திருக்கும் நடிகை பியா இந்தப் படம் குறித்துக் கூறியிருப்பதாவது,

 செம்ம கதை :

செம்ம கதை :

இந்த படமும் இந்தக் கதாபாத்திரமும் எனக்குக் கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலட்சுமி எனக்கு போன் பண்ணி இப்படத்தின் கதையைக் கூறியபோது அது என்னை மிகவும் கவர்ந்தது, அதனால் இதில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன்.

 ஈஸியா கிடைக்காது :

ஈஸியா கிடைக்காது :

எனக்கு மட்டும் இல்லாமல், எந்த ஒரு நடிகைக்கும் இது போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அரிய காரியமே, அதனாலேயே இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.

 மொட்டையடிக்க வேண்டும் :

மொட்டையடிக்க வேண்டும் :

இக்கதையின் ஒரு பகுதிக்காக நான் மொட்டையடிக்க வேண்டியது இருந்தது. இயக்குனர், 'அதற்குரிய விசேஷ மேக்-அப் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி தலையை மொட்டை அடித்தது போன்று காட்டிக் கொள்ளலாம்' என்றார்.

 நிஜ மொட்டை :

நிஜ மொட்டை :

கதைக்கு உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்றால் நான் நிஜமாகவே மொட்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்றேன். அதற்கு அவர், 'எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் எந்தப் பெண், அதுவும் நடிகை சம்பதிப்பார் என்றுதான் தயங்கினேன்' என்றார்.

தோற்றம் மட்டுமே முக்கியம் அல்ல :

தோற்றத்தையும் மீறி ஒரு நல்ல நடிகை எனப் பெயர் வாங்க முடியும் என்று நம்புபவள் நான். அதனால் துணிந்து மொட்டை அடித்துக் கொண்டேன். இந்தத் துணிச்சலான, அழகான காதல் கதையை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.

 காதல் காவியம் :

காதல் காவியம் :

தமிழ் சினிமாவின் காதல் காவியங்களின் பட்டியலில் 'அபியும் அனுவும்' நிச்சயம் சேரும் என நம்பிக்கையோடு உள்ளேன்.' என்கிறார் பியா பாஜ்பாய்.

English summary
Actress Pia Bajpai has tonsured her head for the upcoming movie 'Abhiyum Anuvum'.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos