»   »  விளம்பர உலகில் ஜொலிக்கும் அசின், த்ரிஷா, அனுஷ்கா... தேவதைகள்…

விளம்பர உலகில் ஜொலிக்கும் அசின், த்ரிஷா, அனுஷ்கா... தேவதைகள்…

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

விளம்பர உலகம் கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் உலகம். சொல்ல வேண்டிய விசயத்தினை 30 நொடிகளில் சொல்லி புரியவைப்பது அவசியம் அதுதான் அந்த விளம்பரத்தின் வெற்றி.

விளம்பர மாடல்கள் பலர் இருந்தாலும் இன்றைக்கு கோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விளம்பர உலகில் கோலோச்சுகின்றனர். இதற்காக கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர்.

அசின், த்ரிஷா, சினேகா மட்டுமல்லாது சமீபத்தில் அறிமுகமான லட்சுமி மேனன் வரை விளம்பர உலகில் கொடி கட்டிப் பறக்கின்றனர். இவர்களில் சிலர் சினிமாவில் ஜெயித்தாலும் விளம்பரத்தில் ஜொலிக்கமாட்டார்கள். ஆரம்பம் தொடங்கி இன்றைக்கு வரை விளம்பர உலகில் ஜெயிக்கும் திரை உலக தேவதைகளைப் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

அசின் டிமாண்ட் அதிகம்

அசின் டிமாண்ட் அதிகம்

பட்டுப்புடவை விளம்பரத்தில் தொடங்கி, ஃபேர்னஸ் கிரீம், சாப்ட் டிரிங்ஸ் விளம்பரத்தின் பிராண்ட் அம்பாசிடர் என பல ஆண்டுகளாக விளம்பர உலகில் கொடி கட்டிப் பறக்கிறார் அசின். கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கோலோச்சும் அசினுக்கு சம்பளம் 1.25 கோடி ரூபாய் என்கிறது தகவல் ஒன்று.

த்ரீஷாவின் பயணம்

த்ரீஷாவின் பயணம்

மிஸ் சென்னையில் தொடங்கிய பயணம் இப்போது சினிமா, விளம்பரம் என 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொடி கட்டிப் பறக்கிறார் த்ரீஷா. ஜவுளிக்கடை, டீ, சோப்பு, ஃபேஸ் கிரீம் என விளம்பரத்தில் ஜொலிக்கும் த்ரீஷாவிற்கு 75 லட்சம் ரூபாய் சம்பளமாம்.

மீரா ஜாஸ்மின் குடும்பப் பாங்கு

மீரா ஜாஸ்மின் குடும்பப் பாங்கு

ஜவுளிக் கடை விளம்பரத்தில் காண்பவர்களை கொள்ளை கொள்ளும் அழகோடு வலம் வரும் மீரா ஜாஸ்மின் கட்டிய பட்டுப்புடவைக்கு மவுசு அதிகமாம்.

அனுஷ்காவின் அழகு

அனுஷ்காவின் அழகு

சினிமாவைப் போலவே விளம்பர உலகிலும் அனுஷ்காவிற்கு தனி வரவேற்பு உண்டு ஜவுளிக் கடை தொடங்கி ஷாம்பு விளம்பரம் வரை பல நிறுவனங்களில் பிராண்ட் அம்பாஸிடராக உள்ளார் அனுஷ்கா.

சூப்பர் ஸ்டாரினி ஸ்னேகா

சூப்பர் ஸ்டாரினி ஸ்னேகா

ஜவுளிக்கடையோ, சாம்பார் பவுடரோ, கோதுமை மாவோ, நகை விளம்பரமோ எதுவென்றாலும் கூப்பிடு ஸ்நேகாவை என்றாகிவிட்டது. திருமணத்திற்கு முன்பு தனியாக விளம்பரங்களில் ஜொலித்த ஸ்நேகா இப்போது கணவர் பிரசன்னா உடன் நடித்து வருகிறார்.

ஸ்ரேயா ஸ்டைல்

ஸ்ரேயா ஸ்டைல்

ஸ்ரேயாவின் உடல்வாகு மாடலிங் செய்வதற்கு ஏற்றது. அதனால்தான் நகை விளம்பரம் தொடங்கி, டீ தூள், ஜவுளிக்கடை ஜொலிக்கிறார். இதற்காக அவர் வாங்கும் தொகை 75 லட்சம் ரூபாயாம்.

காஜல் அகர்வால் கலக்கல்

காஜல் அகர்வால் கலக்கல்

நடிகர் கார்த்தி உடன் காஜல் அகர்வால் நடித்த காபித்தூள் விளத்பரம் ரசிகர்களிடையே பிரபலம். அதேபோல சோப்பு விளம்பரத்திலும் நடித்து வருகிறார். சினிமாவைப் போல விளம்பர உலகிலும் காஜல் அகர்வாலுக்கு தனி வரவேற்பு உள்ளது.

தமன்னா புடவை

தமன்னா புடவை

சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே விளம்பர உலகில் ஜொலித்தவர் தமன்னா. சோப்பு, ஜவுளிக்கடை என்று இன்றைக்கும் விளம்பர உலகில் நடிக்கிறார் தமன்னா.

ஸ்ருதிஹாசன் ஆன்லைன் விளம்பரம்

ஸ்ருதிஹாசன் ஆன்லைன் விளம்பரம்

உள்ளூர் ஜவுளிக்கடை மட்டுமல்லாது அமெரிக்கன் ஸ்வான் என்ற ஆன்-லைன் நிறுவனம் இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக ஸ்ருதியை நியமித்துள்ளது. உடைகள், காலணிகள், பேக் உள்ளிட்ட பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் பொருட்களை வாங்குவோருக்கு, மிகவும் பரீச்சயமான நிறுவனம், அமெரிக்கன் ஸ்வான்.

இது மயிலு ஸ்டைல்

இது மயிலு ஸ்டைல்

70 களில் சினிமா உலகை கலக்கிய தேவதையான ஸ்ரீதேவி இன்றைக்கும் நகை விளம்பரத்தில் மயிலு ஸ்டைல் என கலக்கி வருகிறார். அவரைப் போல ஹேமமாலினியும் நம் ஊர் ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடித்து வருகிறார்.

ஜொலிக்கும் தேவதைகள்…

ஜொலிக்கும் தேவதைகள்…

இவர்களைத் தவிர லட்சுமி ராய்,பிரியா மணி, தேவயானி,

அஞ்சலி, லட்சுமி மேனன் ஆகியோரும் விளம்பர உலகில் ஜொலிக்கும் தேவதைகளாக உலாவருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Cinema might be their first priority, but ad films must come a close second. Relatively easy schedules, lighter work and the most attractive part, the handsome pay that is on offer has made all the lovely ladies take to ads in a big way. But not everyone gets to command the big bucks, let’s see who gets how much.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more