ரூம் போடவா.. ஓட்டலுக்கு வரியானு கேட்டான்.. நகைச்சுவை நடிகை பகீர் பேட்டி!
சென்னை: சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் அதற்காக பல அட்ஜஸ்மெண்டுகளை செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. பல நடிகைகள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து இருந்தாலும், இதுபற்றி வெளியில் சொல்லாமல், சினிமாவே வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டு சென்று விடுவார்கள், சிலர் சினிமா மீது இருக்கும் ஆசையால், அட்ஜஸ்மெண்டுக்கு உடன்பட்டு விடுவார்கள். சினிமா தோன்றிய காலத்தில் இருந்தே இந்த பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதுபற்றி பேசாமல் இருந்த நடிகைகள், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, துணிந்து வந்து தங்கள் வாழ்க்கையில் சந்தித்த இது போன்ற மோசமான அனுபவங்களை தைரியமாகவும், துணிச்சலாகவும் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் தெலுங்கு நடிகைச்சுவை நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து மனம் திறந்து கூறியிருக்கிறார். அதில், ஒரு இயக்குநர் பட வாய்ப்பு வேண்டும் என்றால், ஓட்டலுக்கு வா என அழைத்தார் என கூறியுள்ளார். தெலுங்கு நடிகையான கீதா சிங், 2006 ஆம் ஆண்டு வெளியான 'கிதாகிதாலு' படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்தப் படத்தின் வெற்றிக்கு பின் அவருக்கு "கிதாகிதாலு கீதா சிங்" என்ற அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, கீதா சிங் பலத்திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

நகைச்சுவை நடிகை: தற்போது, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும், இணையத்தில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அண்மையில், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள இவர், நான் சினிமாவிற்கு வந்த புதிதில், காஸ்டிங் கவுச் சவால்களை எதிர்கொண்டதாகவும், ஒரு முன்னணி இயக்குநர், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறினார். அவர் அந்த வார்த்தையை சொன்னதும், இனி பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்டது, இனி ஒரு பிரகாசமான எதிர்காலம் எனக்கு இருக்கும் என்று நம்பினேன். ஆனால், அந்த முன்னணி இயக்குநர் என்னிடம் தவறாக பேசினார். உங்களிடம் பேச வேண்டும் ஒரு ஹோட்டலுக்கு வா என அழைத்தார். அவர் அழைத்ததில் எனக்கு முரண்பாடு இருந்ததால், நான் மறுத்துவிட்டு, ஓட்டலுக்கு வர முடியாது என தெளிவாக சொல்லிவிட்டேன்.
ஓட்டலுக்கு அழைத்தார்: அதன், பின் எனக்கு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. நான் நடிக்க வேண்டிய அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வேறு ஒரு நடிகைக்கு போய்விட்டது. அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் எனக்கு அன்று கிடைத்து கிடைத்தால் என் சினிமா வாழ்க்கை இன்னும் சிறப்பானதாகவும், ஒரு முன்னணி நகைச்சுவை நடிகையாகவும் இருந்து இருப்பேன். ஆனால், நான் தவறான வழியில் செல்ல விரும்பவில்லை. என் நடிப்பு திறமையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்ததால், தொடர்ந்து போராடினே அதன் பின் ஒரு சில படத்தில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் இருக்கும் பல நடிகைகளுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. பல நடிகைகள் வாய்ப்புகளுக்காகப் நேர்மையுடன் போராடி வருகிறார்கள் என்று நடிகை கீதா சிங் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











