For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திருமண வாழ்க்கை முறிவு… மன அழுத்தம்... சமந்தாவை கைவிட்ட 2021 !

  |

  சென்னை : 2021ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட நடிகையாக இருந்தவர் சமந்தா .

  ஊடகங்கள், செய்தித்தாள், டிஜிட்டல் மீடியா என எந்த பக்கம் திரும்பினாலும் அதில், சலிக்காமல் முதல் இடம் பிடித்தார் சமந்தா.

  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம்! பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம்!

  நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த சமந்தா மற்றும் நாக சைத்தன்யா, திடீரென உறவை முறித்துக்கொண்டு பிரிந்தனர். இவர்கள் இருவரின் பிரிவு ரசிகர்களை பெரும் மனக்கவலை கொள்ளவைத்தது.

  காதல் திருமணம்

  காதல் திருமணம்

  தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா. நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவால் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

  ஹிட் படங்களில்

  ஹிட் படங்களில்

  திருமணத்திற்கு பிறகும், சமந்தா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். அதேபோல நாக சைத்தன்யாவும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

  பெயர் மாற்றம்

  பெயர் மாற்றம்

  பலரின் கண்படும் அளவுக்கு மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இந்த ஜோடி குறித்து அரசல் புரசலாக வதந்திகள் பரவின. வதந்திக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது இன்ஸ்டாகிராம் பெயர் மாற்றம். 'சமந்தா அக்கினேனி' என வைத்திருந்த பெயரை 'S' என மாற்றினார் சமந்தா.

  வேகமாக பரவிய வதந்தி

  வேகமாக பரவிய வதந்தி

  இதையடுத்தே, சமந்தா- நாக சைதன்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிகிறார்கள் என வதந்திகள் இணையத்தில் பரவின. காட்டுத்தீ போல பரவிய வதந்திக்கு எந்த பதிலும் அளிக்காமல் இருவரும் மௌமாகவே இருந்தனர்.

  பிரிகிறோம்

  பிரிகிறோம்

  திடீரென அக்டோபர் 2ந் தேதி இருவருமே தத்தமது சமூக வலைத்தள பக்கத்தில் "பல உரையாடல்கள் மற்று யோசனைகளுக்கு பிறகு நானும் சாய்யும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம்," என்று பதிவிட்டு பிரிந்தனர்.

  பிரிவுக்கு காரணம்

  பிரிவுக்கு காரணம்

  ஏன் பிரிந்தார்கள் ... இவர்கள் பிரிவுக்கான காரணம் என்ன வென்று தெரியாமல் ரசிகர்க ள் குழம்பிப் போனார்கள். திருமணத்திற்கு பின்பும் அதிக கவர்ச்சி காட்டி நடித்ததும், குழந்தை குறித்து பிரச்சனை என்றும், சமந்தாவின் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றிய ப்ரீதம் ஜுகல்கருடன் சமந்தா காட்டிய நெருக்கம் தான் இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்று பலவிதமான கருத்துக்கள் இணையத்தில் பரவின.

  ஜீவனாம்சம்

  ஜீவனாம்சம்

  மேலும், நாகசைதன்யா குடும்பத்திலிருந்து சமந்தாவுக்கு ரூ.200 கோடி ஜீவனாம்சம் தருவதாக கூறினார்களாம். ஆனால் சமந்தா இதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஐதராபாத்தில் இருவரும் ஒன்றாக வாழ்ந்த வீடு சமந்தாவுக்கு சொந்தமானது என்பதால், நாக சைதன்யா அந்த வீட்டில் இருந்து வெளியேறி தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார்.

  ஆன்மிக பயணம்

  ஆன்மிக பயணம்

  பல விதமான சர்ச்சை பேச்சுக்கள்... மோசமான வதந்திகள்... அறுவறுப்பான விமர்சனங்களால் மனதளவில் பாதிக்கப்பட்ட சமந்தா, தனது தோழியுடன் ஆன்மீக சுற்றுலா சென்றார். ரிஷிகேஷ், திருப்பதி ஏழுமலையான் கோவில் என கோவில் கோவிலா வலம் வரத்தொடங்கினார்.

  படங்களில் கவனம்

  படங்களில் கவனம்

  மன வேதனையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த சமந்தா, விக்னேஷ் சிவன் இயக்கிவரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' மற்றும் யசோதா, சாகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

  Recommended Video

  தப்பா பேசினாலும் தமிழ்ல தான் பேசுவேன் | Pushpa Tamil pressmeet
  வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள்

  2021ம் ஆண்டு சமந்தாவுக்கு நல்ல ஆண்டாக அமையவில்லை, வரும் 2022ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என சமந்தா ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். . சமந்தா திரைப்படங்களில் நடித்து மேலும் உச்சம் தொட வேண்டும் என்பதே சமந்தா ரசிகர்களின் ஆசையாக உள்ளது. வரும் புதிய ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

  English summary
  The most talked Heroine Samantha of 2021
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X