»   »  ஹய்யோ.. இவங்களைப் பார்த்தா அப்படியே நஸ்ரியா மாதிரியே இருக்காங்களே.. கவனிச்சீங்களா?

ஹய்யோ.. இவங்களைப் பார்த்தா அப்படியே நஸ்ரியா மாதிரியே இருக்காங்களே.. கவனிச்சீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா மாதிரி பொண்ணு வேணும் என்று தேடும் ஆண்களைப் பார்த்துள்ளோம். ஆனால் நஸ்ரியாவைப் போல நடிகை வேண்டும் என்று தேடி அலைந்தவர்களைப் பார்த்துள்ளீர்களா.. அப்படியானால் சதுரன் படக் குழு பற்றி நீங்கள் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும்.

நயன்தாரா மாதிரி நடிகை வேண்டும் என்று இயக்குநர் ஹரி தேடியதால் கிடைத்த விளைவுதான் நடிகை பானு. அதேபோல தங்களது சதுரன் படத்திற்கும் நஸ்ரியா போல நடிகை வேண்டும் என்று அப்பட இயக்குநர் தேடியதன் விளைவுதான் வர்ஷா மலேத்திரியா.


அச்சு அசல் நஸ்ரியா போலவே நாயகி இருக்க வேண்டும் என்பது இயக்குநர் ராஜீவ் பிரசாத்தின் விருப்பம். கடைசியில் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு அது நிறைவேறியதாம்.


சதுரன்...

சதுரன்...

குபேரன் சினிமாஸ் வழங்க, ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ் வெளியிடும் படம்தான் சதுரன்.


ராஜாஜ் - வர்ஷா...

ராஜாஜ் - வர்ஷா...

இப்படத்தில் நாயகனாக ராஜாஜ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் வர்ஷா மலேத்திரியா. ஜனனி என்ற கேரக்டரில் வருகிறாராம் வர்ஷா.


நஸ்ரியா போலவே...

நஸ்ரியா போலவே...

இப்படத்தின் நாயகி நடிகை நஸ்ரியாவைப் போல இருக்க வேண்டும் என்பது இயக்குநரின் ஆசை. ஆனால் நஸ்ரியா நடிப்பிலிருந்து விலகி விட்டதால் அவரது முகச் சாயலைக் கொண்ட நடிகையைத் தேடினர்.


வர்ஷா கிடைத்தார்....

வர்ஷா கிடைத்தார்....

இந்தத் தேடலில் கிடைத்தவர்தான் வர்ஷா. அவரும் இயக்குநரின் எண்ணம் போலவே அழகாக நடித்துள்ளாராம்.


பிளஸ் பாயிண்ட்...

பிளஸ் பாயிண்ட்...

பார்ப்பவர்கள் எல்லாம் தன்னை நஸ்ரியா போல் இருப்பதாகக் கூறியதால், தனக்கென தனியாக அடையாளம் இல்லையா என கவலைப்பட்டாராம் வர்ஷா. ஆனால், தற்போது அதுவே அவருக்கு ஒரு பிளஸ் ஆக இருக்கிறதாம்.


நஸ்ரியாவுக்கு நன்றி...

நஸ்ரியாவுக்கு நன்றி...

இப்படம் ரிலீசான பிறகு, நஸ்ரியா போலவே தனக்கும் ரசிகர்கள் மனதில் நிச்சயம் ஒரு இடம் கிடைக்கும் என நம்புகிறாராம் வர்ஷா. பட ரிலீசுக்கு முன்னரே தனக்கு இப்படி ஒரு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்தத்திற்கு நஸ்ரியாவுக்கு தான் நன்றி என்கிறார் இவர்.


டப்ஸ்மாஷ் புகழ்...

டப்ஸ்மாஷ் புகழ்...

சதுரன் படம் மட்டுமின்றி மேலும் சில இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன் உட்பட மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் வர்ஷா. இவரது ராஜா ராணி பட டப்ஸ்மாஷ் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலம்.


ஸ்லம்டாக் மில்லியனர் ஒளிப்பதிவாளர்...

ஸ்லம்டாக் மில்லியனர் ஒளிப்பதிவாளர்...

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் மோனிக் குமார். இவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஆவார்.


இயக்கம் ராஜீவ் பிரசாத்...

இயக்கம் ராஜீவ் பிரசாத்...

குபேரன் பொன்னுசாமி தயாரிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கே.ராஜீவ் பிரசாத்.


ஒய்யால...

ஒய்யால...

படத்தில் மொத்தம் 5 பாடல்கள். ஒய்யால என்ற பாட்டை மகாலிங்கம் பாடியுள்ளார். ஒன்ஸ் அப்பான்ன டைம் என்ற பாடலை கானா பாலாவும், விக்கியும் பாடியுள்ளனராம். இதுபோக கீச்சகவதம் தெருக்கூத்துப் பாடலும் இடம் பெறுகிறது. என்ன நடக்குது என்ற பாடலை இசையமைப்பாளர் ரிஷால் சாய் எழுத மகாலிங்கம் பாடியுள்ளார். 5வது பாடல் ரிங்கா ரிங்கா ரோசஸ்.. முத்தமிழ் பாடியுள்ளார்.


நஸ்ரியா போல ரவுண்டு வருவாரா வர்ஷா.. பொறுத்திருந்து பார்க்கலாம்.English summary
Upcoming actress Varsha Bollamma is more known for her striking resemblance to Nazriya Nazim and her dubsmash video mouthing Raja Rani dialogue. The young girl from Coorg is currently busy with three Tamil films in her kitty.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil