»   »  சுனைனா-நகுலனின் கிஸ்!

சுனைனா-நகுலனின் கிஸ்!

Subscribe to Oneindia Tamil
Sunayana
இதோ இன்னும் ஒரு முத்தச் செய்தி. காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோ நகுலனும், நாயகி சுனைனாவும் 13 விநாடிகள் வரும் முத்தக் காட்சியில் நடித்துள்ளனராம்.

பிரிவோம் சந்திப்போம் படத்தில் சேரனும், சினேகாவும் கொடுத்துக் கொண்ட 6 விநாடி முத்தக் காட்சி குறித்து நேற்று பார்த்தோம். இப்போது இன்னும் ஒரு தித்திப்பான முத்தச் செய்தி.

தேவயானியின் தம்பி நகுலன், பாய்ஸ் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக உலா வந்தவர். குண்டு உருவத்துடன் அந்தப் படத்தில் வந்து போன நகுலன் இப்போது ஸ்லிம் ஆகி 'டிப்பிகல்' ஹீரோ கெட்டப்புக்கு மாறி விட்டார்.

நகுலன் தனி நாயகனாக அறிமுகமாகும் படம் காதலில் விழுந்தேன். இதில் அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் சுனைனா. பி.வி.பிரசாத் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நகுலனும், சுனைனாவும் பங்கேற்ற முத்தக் காட்சி பற்றி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்து இயக்குநர் பிரசாத்திடம் கேட்டபோது, புதுச்சேரியில் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கினோம்.

கதைப்படி, புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் மற்ற மாணவர்கள் முன்பு சுனைனாவை கட்டிப் பிடித்து நகுலன் கிஸ் பண்ண வேண்டும்.

இதுகுறித்து நகுலனிடம் கூறியபோது முதலில் அவர் தயங்கினார். காரணம், அவருக்கு இது முதல் முத்தக் காட்சி என்பதால். ஆனால் சுனைனாதான் அவரை ஆறுதல் படுத்தி, நடிக்க ஊக்கப்படுத்தினார் (அது என்ன, ஹீரோயின்களே பஞ்சாயத்து செய்து சம்மதிக்க வேண்டியுள்ளது?)

பிறகு எந்தப் பயமும், தயக்கமும் இன்றி நகுலன், சுனைனாவுக்கு முத்தமிட்டு நடித்தார். இந்தக் காட்சி படத்திற்கு மிகவும் முக்கியமானது, தேவையானது. படத்தில் இந்தக் காட்சி 13 விநாடிகளுக்கு வரும் என்றார் பிரசாத்.

முத்தமிட்ட நகுலனிடம் முதல் அனுபவம் குறித்து கேட்டபோது, முதலில் தயங்கினேன். பிறகு ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு முத்தம் கொடுத்து நடித்ேதன். இருந்தாலும் எனது முத்தத்தில் இயக்குநருக்குத் திருப்தி வரவில்லை.

இதையடுத்து எனது உள்ளங்கையில் கிஸ் கொடுத்து பிராக்டிஸ் செய்தேன். அதைப் பார்த்து சுனைனா விழுந்து விழுந்து சிரித்தார். என் உதட்டிலேயே ரிகர்ஸல் எடுக்கலாம் என பெருந்தன்மையாக கூறினார். இயக்குநரும் அவ்வாறே செய்யுமாறு வலியுறுத்தினார்.

இருந்தாலும் அத்தனை பேருக்கு முன்னால் ரிகர்சல் எடுக்க எனக்கு தயக்கமாக இருந்தது. இதையடுத்து அங்கிருந்து கிளம்பி, ஒரு மரத்திற்குப் பின்னால் ஒதுங்கி ரிகர்சல் செய்தேன். சில நிமிட ரிகர்சலுக்குப் பிறகு நான் தேறி விட்ேடன். அதன் பிறகு ஒரே டேக்கில் (மரத்திற்குப் பின்னால் எடுத்த டேக் எத்தனையோ!) முத்தமிட்டு ஓ.கே. செய்து விட்டேன் என்று தனது முத்த அனுபவத்தை மொத்தமாக கூறி முடித்தார் நகுலன்.

சுனைனாவின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு 'எக்சலன்ட்' என்றார் நகுலன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil