»   »  சமந்தா அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது... "ஜிம்" மாஸ்டர் "ஷொட்டு!

சமந்தா அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது... "ஜிம்" மாஸ்டர் "ஷொட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தினமும் காலை 5 மணிக்கே எழுந்து உடற்பயிற்சிக்கு தயாராகி விடும் சமந்தாவின் அர்ப்பணிப்பை அவரது பயிற்சியாளர் பாராட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தோல் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதன் காரணமாக பல பட வாய்ப்புகளை இழந்தார். இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள சமந்தா, தற்போது மீண்டும் தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அதன்படி, ‘கத்தி' படத்திற்குப் பிறகு, விக்ரமுடன் இணைந்து ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் மற்றும் சூர்யாவுடனும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதைத்தவிர அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திலும் சமந்தா தான் நாயகி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடற்பயிற்சியில் கவனம்...

உடற்பயிற்சியில் கவனம்...

எனவே, தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள சமீபகாலமாக சமந்தா உடற்பயிற்சிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது அவர் வெளியிட்டு வருகிறார்.

இவர் தான் காரணம்...

இந்நிலையில், தனது பயிற்சியாளர் ராஜேஷின் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் சமந்தா. மேலும், அதில் ‘நான் தற்போது பிட்டாக இருக்க இவர் தான் காரணம்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவுக் கட்டுப்பாடு...

உணவுக் கட்டுப்பாடு...

சமந்தா பற்றி பயிற்சியாளர் ராஜேஷ் கூறுகையில், ‘நான் சமந்தாவிற்கு உடற்பயிற்சியாளராக கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறேன். சமந்தாவின் உடல் தோற்றம் வசீகரமானதாக மாறுவதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மேற்கொண்டிருக்கிறார்.

மிகுந்த ஈடுபாடு...

மிகுந்த ஈடுபாடு...

புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழ வகைகளை மட்டுமே அவர் சாப்பிடுகிறார். மேலும் பயிற்சியை மேற்கொள்வதில் மிகவும் ஈடுபாடுடன் உள்ளார்.

அர்ப்பணிப்பு...

அர்ப்பணிப்பு...

எப்போதுமே காலை 5 மணிக்கே உடற்பயிற்சிக்கு தயாராகிவிடுவார். அவருடைய அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
The man who got me obsessed with fitness. The best and my most favorite trainer, actress Samantha tweeted
Please Wait while comments are loading...