»   »  குட்டைப் பாவாடையைப் போட்டு "ஷூட்" பண்ணி ஏமாத்திட்டாங்க - புலம்பும் மலையாள நடிகை

குட்டைப் பாவாடையைப் போட்டு "ஷூட்" பண்ணி ஏமாத்திட்டாங்க - புலம்பும் மலையாள நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: என்னை ஏமாற்றி, குட்டைப் பாவாடை போட வைத்து போட்டோ ஷூட் நடத்தி ஏமாற்றி விட்டார்கள் என்று மலையாள நடிகையான அன்சிபா ஹாசன் தான் நடித்து வரும் தமிழ்ப் படக் குழு மீது புகார் கூறியுள்ளார்.

தமிழில் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த அன்சிபா ஹாசன் தொடர்ந்து பரஞ்ஜோதி என்ற தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக புரோமோஷன் ஆனார்.

இந்நிலையில் தான் நடித்து வரும் படக்குழுவினர் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை அன்சிபா ஹாசன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அன்சிபா ஹாசன்

அன்சிபா ஹாசன்

தமிழில் பரஞ்ஜோதி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அன்சிபா ஹாசன்.புதுமுகம் சாரதி மற்றும் கஞ்சா கருப்பு, விஜயகுமார் ஆகியோருடன் இவர் இணைந்து நடித்த பரஞ்ஜோதி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. பரஞ்ஜோதி பெரிதாக கைகொடுக்காத நிலையில் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த திரிஷ்யம் படத்தில் மோகன்லால் - மீனாவின் மூத்த மகளாக அன்சிபா நடித்திருந்தார்.

கைகொடுத்த திரிஷ்யம்

கைகொடுத்த திரிஷ்யம்

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் வெற்றியால் அன்சிபா ஹாசனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் என்னை ஏமாற்றி குட்டைப் பாவாடையுடன் புகைப்படங்கள் எடுத்தார்கள் என்று தமிழ்ப் படக்குழுவினர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

என்னை மிரட்டினார்கள்

என்னை மிரட்டினார்கள்

மேலும் இது குறித்து அவர் கூறும்போது "நான் குட்டைப் பாவாடையுடன் தோன்றும் காட்சிகள் படத்திற்கு தேவையாக இல்லாவிடினும், அவர்கள் என்னை வைத்து புகைப்படங்களை எடுத்தார்கள். இது குறித்து நான் கேட்டபோது அவர்கள் என்னை மிரட்டினார்கள்" என்று தன்னைப் பாதித்த அந்த போட்டோ ஷூட் குறித்து அன்சிபா ஹாசன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

கடைசிவரை சொல்லலையே பாஸ்

கடைசிவரை சொல்லலையே பாஸ்

பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருக்கும் அன்சிபா ஹாசன் கடைசிவரை தன்னை மிரட்டியவர்கள் குறித்தோ, மற்றும் படத்தின் பெயர் தொடர்பான மற்ற விவரங்கள் பற்றியோ பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mini Skirt Photo Shoot Issue; Malayala Actress Ansiba Haasan Says in Recent Interview "They are Cheated me".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil