கல்யாணம் ஆகாமல் கர்ப்பமானாரா தனுஷ் பட நாயகி? நித்யா மேனன் இன்ஸ்டா பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை நித்யா மேனன்.

34 வயதை கடந்த நித்யா மேனன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், பிரெக்னன்ஸி டெஸ்ட்டில் பாசிட்டிவ் என வந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவிட்டு அனைவரையும் பதற வைத்துள்ளார்.

உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்றும் வாழ்த்துக்கள் நித்யா மேனன் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நித்யா மேனன்

நித்யா மேனன்

1998ம் ஆண்டு வெளியான ஹனுமான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் வெப்பம், 180 டிகிரி உள்ளிட்ட படங்களின் மூலமாக கடந்த 2011ம் ஆண்டு கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். காஞ்சனா, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஷோபனா

ஷோபனா

தனுஷ் உடன் ஜோடியாக இந்த ஆண்டு நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தனுஷை விட அந்த படத்தில் ஷோபனாவாக நடித்த நித்யா மேனன் நடிப்பைத் தான் ரசிகர்கல் வெகுவாக ரசித்து தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தனர்.

நித்யா மேனன் கர்ப்பமா

நித்யா மேனன் கர்ப்பமா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகை நித்யா மேனனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நித்யா மேனன் கர்ப்பமா என்கிற அதிர்ச்சி ரசிகர்களை ஆட்கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள அந்த போஸ்ட்டும் அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனும் தான்.

பிரெக்னன்ஸி டெஸ்ட்

பிரெக்னன்ஸி டெஸ்ட்

நடிகை நித்யா மேனன் தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிரெக்னன்ஸி டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும் அதன் அருகே குழந்தைக்கு கொடுக்கப்படும் ரப்பர் நிப்பலையும் வைத்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு And, the Wonder Begins என கேப்ஷன் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

நடிகை நித்யா மேனன் கல்யாணம் செய்து கொள்ளாமலே எப்படி கர்ப்பமானார் என்றும், இதற்கு காரணமான அந்த அதிர்ஷ்டசாலி யாரு நித்யா மேனன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள் நித்யா மேனன் அம்மாவானதற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

பட ப்ரொமோஷனா

பட ப்ரொமோஷனா

இது கண்டிப்பாக நித்யா மேனனின் புதிய பட ப்ரொமோஷனாகத்தான் இருக்கும். இப்படி மொட்டையாக போஸ்ட் போட வேண்டியது, அதன் பிறகு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து விட்டனர் என அழ வேண்டியது. இதுதான் இந்த பப்ளிசிட்டி பைத்தியங்களின் பிழைப்பே என நெட்டிசன்கள் சிலர் கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அவரே அறிவிப்பார்

அவரே அறிவிப்பார்

உண்மையாகவே நித்யா மேனன் கர்ப்பமாக உள்ளாரா? இல்லை இது முற்றிலும் புதிய படத்திற்கான புரமோஷனா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பி உள்ளனர். விரைவில் அவரே அது தொடர்பாக அறிவிப்பார். தேவையில்லாமல் டென்ஷனாகாமல் போய் பொழைப்பை பாருங்க என்றும் கமெண்ட்டுகள் பறந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X