»   »  நான் நடிச்ச முதல் படத்தை நானே இதுவரை பார்க்கவில்லை: அஜீத் ஹீரோயின்

நான் நடிச்ச முதல் படத்தை நானே இதுவரை பார்க்கவில்லை: அஜீத் ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன்னை தனது அப்பாவுக்கும், அக்காவுக்கும் பிடிக்காது என்று பாலிவுட் நடிகை தபு தெரிவித்துள்ளார். மேலும் தான் நடித்த முதல் படத்தை தானே இதுவரை பார்க்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் தபு. திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வருகிறார். 11 வயதில் நடிக்க வந்த அவருக்கு 45 வயதாகிறது.


இந்நிலையில் தபு தனது வாழ்க்கை பற்றி கூறியிருப்பதாவது,


அப்பா

அப்பா

என் அப்பாவுக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும். ஆனால் நானும், என் அக்காவும் பெண்ணாக பிறந்துவிட்டோம். இரண்டாவது குழந்தையாவது ஆணாக பிறக்கும் என்று அவர் எதிர்பார்த்தபோது நான் பெண்ணாக பிறந்தது அவருக்கு பிடிக்கவில்லை.


வெறுப்பு

வெறுப்பு

அப்பா என்னிடம் வெறுப்பை மட்டுமே காட்டினார். அதனால் என்னை நானே வெறுக்கத் துவங்கினேன். என் அம்மாவும், அப்பாவும் நான் சிறுமியாக இருக்கும்போது பிரிந்துவிட்டார்கள்.


அக்கா

அக்கா

அம்மாவுக்கு என் மீது பாசம் அதிகம். இது என் அக்காவுக்கு பிடிக்காது. அதனால் எப்பொழுது பார்த்தாலும் என்னை அழ வைத்துக் கொண்டே இருப்பாள். நான் எதுவாக இருந்தாலும் அவளை கேட்டுத் தான் செய்ய வேண்டும்.


முதல் படம்

முதல் படம்

என் அப்பாவால் நான் பயந்த சுபாவம் உள்ளவள் ஆகிவிட்டேன். என் முதல் படத்தை பதட்டத்துடன் நடித்தேன். அந்த படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை. என் அம்மாவும், அக்காவும் படத்தை பார்த்துவிட்டு நான் நன்றாக நடித்திருப்பதாகக் கூறி அழுதார்கள் என்றார் தபு.


English summary
Bollywood actress Tabu said that she hasn't watched her debut movie till date. She added that her dad hated her right from birth.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil